மாநில அளவிலான சிலம்ப போட்டியில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாணவர்கள் சாதனை

Nov 8, 2025 - 22:54
Nov 8, 2025 - 22:55
மாநில அளவிலான சிலம்ப போட்டியில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாணவர்கள் சாதனை

மாநில அளவிலான சிலம்ப போட்டியில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் மாணவர்கள் சாதனை

சேலம் மாவட்டம் ஜலகண்டபுரத்தில் தமிழ்நாடு சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பு போட்டியில் யூனிவர்சல் தவுகித் ஜமாஅத் ஸ்போர்ட்ஸ் மாணவர்கள் கலந்துக்கொண்டு வெற்றி பெற்றுள்ளனர். இதில் 1 - 17 வயதிற்கான சுற்றில் முஹம்மது இர்ஃபான் 30 புள்ளிகள் எடுத்து முதலிடமும், 2 - 16 வயதிற்கான சுற்றில் முஹம்மது சல்மான் 26 புள்ளிகள் எடுத்து முதலிடமும், 3 - 13 வயதிற்கான சுற்றில் முஹம்மது அர்சத் 27.5 புள்ளிகள் எடுத்து இரண்டாம் இடமும், 4 - 12 வயதிற்கான சுற்றில் 24 புள்ளிகள் எடுத்து இரண்டாம் இடமும், 5 - 10 வயதிற்கான சுற்றில் 25 புள்ளிகள் எடுத்து இரண்டாம் இடமும் எடுத்து வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் பீமநகர் ரபீக் வாழ்த்து தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0