இ. சேவை மைய உரிமையாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் : உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

Oct 25, 2026 - 16:19
இ. சேவை மைய உரிமையாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் : உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

இ. சேவை மைய உரிமையாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் : உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

தமிழ்நாடு இ-சேவை மைய உரிமையாளர்கள் சங்க கூட்டம் மற்றும் உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கும் கூட்டம் திருச்சியில் உள்ள தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி அரங்கத்தில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் சேவியர் முன்னிலை வகித்தார். பொருளாளர் சரவணகுமார், துணைத் தலைவர்கள் ஜெயபிரகாஷ், அருள்செல்வம், கோபி, இணை செயலாளர்கள் லோகநாதன், சுரேஷ், கரோலினாள் மற்றும் 350க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 இந்த கூட்டத்தில் டிஜிட்டல் சேவா போர்ட்டலில் இ-சேவை அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதால், இ-சேவைப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் உள்ள எங்கள் சங்கத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு, புதிய இ-சேவை ஐடிகளை வழங்க வேண்டும். கடந்த 11 ஆண்டுகளுக்கு மேலாக உயர்த்தப்படாமல் உள்ள சேவை கட்டணங்களை உயர்த்த வேண்டும். இ-சேவை மையங்களுக்கு மின் கட்டணத்தில் மானியம் வழங்க வேண்டும். இ. சேவை மைய உரிமையாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும். குடும்ப அட்டை தொடர்பான சேவைகளை இ. சேவை மையங்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0