வாகைப் பூ சூட வரம் தரும் திரு நியமம் ஏழு கன்னியர் மாகாளத்து காளா பிடாரி ஆலயத்தில் நவராத்திரி விழா
வாகைப் பூ சூட வரம் தரும் திரு நியமம் ஏழு கன்னியர் மாகாளத்து காளா பிடாரி ஆலயத்தில் நவராத்திரி விழா
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே நேமம் ஊராட்சியில் 1350 ஆண்டுகளுக்கு முன்பு கற்றளி கோட்டையில் அருளாட்சி செய்தவள் கொற்றவை மாகாளத்து காளா பிடாரி அம்மன். பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன்மாறன் போருக்கு செல்லுவதற்க்கு முன்பு, இவ்ஆலயத்தில் குல மரபு வழியில் வழிபாடு செய்து கொற்றவை காளா பிடாரி ஆசியுடன் வாகைப்பூ சூடிக்கொண்டு போருக்கு சென்று, வெற்றி பெற்றவர். வீரத்தின் விளை நிலமாகவும், தமிழுக்கு முதன் முதலில் மெய்க்கீர்த்தி அமைத்து, தமிழ்த்தாயின் தலைமகனாக வணங்கப்பட்டவர். நேமத்தில் 1008 லிங்கங்கள் அமைத்து வணங்கிய ஆன்மீக சித்தர். தமிழகத்தின் ஆதி சக்தி பீடமாக விளங்கிய இத்திருக்கோயில் கால வெள்ளத்தில் அழிந்தது. தற்போது அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை சார்பாக திருப்பணிகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது. சென்ற ஆகஸ்ட் 23ந் தேதி முன்னாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் திருக்கரங்களினால் பூமி பூசை நடத்தப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றது. முசிறி சட்ட மன்ற உறுப்பினர் எம்.விக்னேஸ்வரன் தலைமையில் நவராத்திரி இரண்டாம் நாள் விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் தஞ்சை மாவட்ட த.வெ கட்சியினர் பலரும் கலந்து கொண்டனர். கொற்றவை காளா பிடாரி, ஆயிரத்தளி காளாபிடாரனேஸ்வரர்,கோட்டை முனியாண்டவர், சங்கிலி கருப்பண்ணசாமி முதலிய தெய்வங்களுக்கு அபிசேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு. அன்னதானம் வழங்கப்பட்டது.
அறக்கட்டளை தலைவர் ஆர்.வி.பாலமுருகன் ஆலோசனையுடன் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் பேராசிரியர் மீ.சந்திரசேகரன் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள், நேமம் தமிழ்வாணன் செய்திருந்தனர். இவ்வழிபாட்டில் அன்பில் வினித், மேலும் விக்னேஸ்குமார், ஒன்றிய கழக செயலாளர், கலைச்ல்வன் , இனைச் செயலாளர், பிரகதீஸ்வரன் பொருளாளர், தங்க துரை இணை செயலாளர், நேமம் சந்திராபோஸ், இணைச் கிளை செயலாளர், ஜோயல் ஒன்றிய செயற்குழு உறுப்பினர் மற்றும் பூதலூர் மத்திய ஒன்றிய அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து கிளைக்கழக செயலாளர்கள் மற்றும் தமிழக வெற்றிக்கழக உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அனைவருக்கும் காளா பிடாரி அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0