சேலம் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் நவீன மருத்துவத்தின் முன்னோடியாக திகழும் ஸ்ரீ கோகுலம் மருத்துவமனை 37 ஆண்டுகள் பூர்த்தியாகி 38 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது

Oct 25, 2025 - 10:10
சேலம் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் நவீன மருத்துவத்தின் முன்னோடியாக திகழும் ஸ்ரீ கோகுலம் மருத்துவமனை  37 ஆண்டுகள் பூர்த்தியாகி 38 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது

சேலம் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் நவீன மருத்துவத்தின் முன்னோடியாக திகழும் ஸ்ரீ கோகுலம் மருத்துவமனை 23.10.2025 அன்று 37 ஆண்டுகள் பூர்த்தியாகி 38 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது. அதனையொட்டி நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையின் மேலாண்மை இயக்குனர் டாக்டர். K.அர்த்தநாரி அவர்கள் கூறியதாவது: "சேலம் மற்றும் சுற்றியுள்ள மாவட்ட மக்கள் உயர் சிகிச்சைக்காக பெரிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய சூழல் இருந்த போது, அவர்களின் மருத்துவ தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் 1988 ஆம் ஆண்டு ஸ்ரீ கோகுலம் மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் சேலத்தில் முதன்முறையாக சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ.ஸ்கேன், அதி நவீன அவசர ஊர்தி சேவை போன்றவற்றை அறிமுகப்படுத்தி படிப்படியாக உறுப்பு மாற்று சிகிச்சைகள், இருதய அறுவை சிகிச்சைகள், கேத் லேப் வசதிகள், அதி நவீன தீவிர சிகிச்சைப் பிரிவுகள், உயர் மருத்துவ படிப்புகள், தேசிய தரச் சான்று பெற்ற ஆய்வகம், இரத்த வங்கி என பல்வேறு நவீன மருத்துவ வசதிகளுடன் சிறந்த பல்நோக்கு மருத்துவமனையாக திகழ்கின்றது. நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவு, இருதய தீவிர சிகிச்சைப் பிரிவு, செயற்கை சுவாச கருவிகள் மற்றும் டயாலிசிஸ் வசதியுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவு, தண்டுவட சிகிச்சை மையம், எண்டாஸ்கோபி துறை போன்ற நவீன சிகிச்சைப் பிரிவுகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இதன் ஒரு அங்கமாக 2011 ஆம் ஆண்டு ஸ்ரீ கோகுலம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை துவங்கப்பட்டு சிக்கலான இரத்தக் குழாய் அடைப்பு நீக்கும் சிகிச்சைகள், சிறு துளை இருதய அறுவை சிகிச்சைகள், மைக்ராஸ்கோப் மூலம் செய்யப்படும் தண்டுவட அறுவை சிகிச்சைகள் மற்றும் ECMO, IABP வசதிகளுடன் கூடிய அதிநவீன தீவிர சிகிச்சைப் பிரிவுகள் போன்றவை பெரிய நகரங்களுக்கு இணையாக செயல்பட்டு வருகின்றன. 1992 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீ கோகுலம் செவிலியர் கல்லூரியில் செவிலியர் படிப்புகள், மேல் ஆராய்ச்சி படிப்புகள் மற்றும் பாராமெடிக்கல் படிப்புகள் ஆகியவை சிறந்த முறையில் பயிற்றுவிக்கப் படுகின்றன. வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (26.10.2025) ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையின் ஆண்டு விழா சேலம் சிவராஜ் இன் ஹோட்டலில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் இந்திய அலுவலர்கள் சங்க தலைவர் ஓய்வுபெற்ற IAS திரு. P.R.சம்பத் அவர்கள் தலைமை விருந்தினராகவும் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் திரு.P. குழந்தைவேலு அவர்கள் மற்றும் ஜி.டி.பி. குழுமங்களின் தலைவர் திரு.S.முத்துராஜன் அவர்கள் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்ள இசைந்துள்ளார்கள். அது சமயம் அனைவரும் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பிக்குமாறு கேட்டுகொள்கிறோம்." பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது மருத்துவமனையின் இயக்குனர்கள், மருத்துவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0