துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு பகுதி செயலாளர் மோகன்தாஸ் ஏற்பாட்டில் முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கல்

Nov 27, 2025 - 11:50

திமுக இளைஞரணி செயலாளரும் தமிழக துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மத்திய மாவட்டம் மேற்கு மாநகரம் பொன்னகர் பகுதி திமுக சார்பில் பிராட்டியூரில் உள்ள சரணாலயம் முதியோர் இல்லத்தில் காலை உணவு பகுதி செயலாளர் மோகன்தாஸ் தலைமையில் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வட்டச் செயலாளர்கள் கவுன்சிலர் ராமதாஸ், பி.ஆர். பால சுப்பிரமணியன், மூவேந்திரன், தனசேகர், மாவட்ட பிரதிநிதி அந்தோணிசாமி, பகுதி நிர்வாகிகள் பவுன்ராஜ், மோகன், பீமநகர் சதீஷ் குமார், சர்ச்சில், கவிதா மாணிக்கம், சுகுமார், கருத்து கதிரேசன், இளைஞரண சார்லி, தினேஷ் குமார், ஐ.டி. விங் பிரஷாந்த், மணிவண்ணன், பிராட்டியூர் மணிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பொன்னகர் பகுதியில் பெரிய மிளகு பாறை, ஒத்தக்கடை, பொன்னகர் ஆகிய இடங்களில் திமுக கொடியேற்றி இனிப்பு வழங்கினர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0