திருச்சி அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை 2வது கேத்லாப் திறப்பு விழா

Mar 7, 2026 - 15:25
திருச்சி அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை 2வது கேத்லாப் திறப்பு விழா

திருச்சி அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை 2வது கேத்லாப் திறப்பு விழா

திருச்சி அப்பல்லோ சிறப்பு மருத்துவமனையில் சிறப்பு வசதிகளுடன் கூடிய 2வது கேத்லாப் மற்றும் உயர்சிறப்பு வசதிகளுடன் புதிய கிரிட்டிகள் கேர் யூனிட்டினை அமைச்சர், முனைவர். அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துக் கொண்டு திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் மூத்த இருதய சிகிச்சை நிபுணர்கள் காதர், டாக்டர் ஷாம் சுந்தர், டாக்டர் ரவீந்திரன், டாக்டர் விஜய் சேகர், டாக்டர் சுந்தரம் ஆகிய மருத்துவ குழுவினர் உடனிருந்தனர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 3வது மண்டல தலைவர் மு.மதிவாணன், மாமன்ற உறுப்பினர் சுரேஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர். அப்பல்லோ சிறப்பு மருத்துவமனையின் சிகிச்சை பெறுகின்ற மக்களின் அதிக பயன்பாட்டிற்கு இந்த லேப் மற்றும் CCU மிக்க பயனுள்ளதாக இருக்கும். மேலும் உயர்ந்த தரத்திலான சிகிச்சைகளை இன்னும் அதிக பயனாளர்களுக்கு பயன்தரக்கூடிய வகையில் அமைந்துள்ளதென அமைச்சர் வாழ்த்தினர். இந்நிகழ்வில் அப்பல்லோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மூத்த மருத்துவ அதிகாரிகளும், பணியாளர்களும் பெருமளவில் கலந்து கொண்டார்கள் அதன்பின் அப்பல்லோ சிறப்பு மருத்துவமனைக்கு போக்குவரத்துக்கு உதவி செய்யும் வகையில் நாமுக்கு நாமே திட்டத்தின் படி புதிய பேருந்து நிறுத்தம் ஒன்றையும் மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கி உரையாற்றினார். இதன்மூலம் அப்பல்லோ சிறப்பு மருத்துவமனைக்கு வரக்கூடிய மருத்துவ பயனாளிக்கு இந்த பேருந்துநிறுத்தம் மிகவும் பயனள்ள வகையில் அமைந்துள்ளது. மேலும் நாமுக்கு நாமே திட்டத்தில் அப்பல்லோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை பங்கு கொண்டு பொது மக்களுக்கும், மருத்துவ பயனாளர்களுக்கும் பேருதவி செய்துள்ளதாக அமைச்சர் மருத்துவமனை நிர்வாகிகளை பாராட்டினார். திருச்சி அப்பல்லோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தலைவரும், அசோசியட் துணை தலைவருமான ஜெயராமன் தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0