ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் சார்பில் கார்த்திக் வைத்திய சாலாவில் நலத்திட்ட உதவிகள் : டாக்டர் கே.எஸ். சுப்பையா பாண்டியன் வழங்கினார்

Mar 15, 2026 - 22:00
Mar 15, 2026 - 22:04
ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் சார்பில் கார்த்திக் வைத்திய சாலாவில் நலத்திட்ட உதவிகள் : டாக்டர் கே.எஸ். சுப்பையா பாண்டியன்  வழங்கினார்

ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் சார்பில் கார்த்திக் வைத்திய சாலாவில் நலத்திட்ட உதவிகள் : டாக்டர் கே.எஸ். சுப்பையா பாண்டியன் வழங்கினார்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78- வது பிறந்த நாளை முன்னிட்டு அனைத்திந்திய சித்தமருத்துவ சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி தில்லை நகர் கார்த்திக் வைத்திய சாலாவில் நடைபெற்றது.

விழாவில் 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சேலைகள், சில்வர் தட்டுகள், இலவச வலி நிவாரணி மருந்துகள் மற்றும் உணவு வழங்கப்பட்டது. மேலும் இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.

 முகாமில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். நலத்திட்ட உதவிகளை அ.தி.மு.க. முன்னாள் மகளிர் அணி மாவட்ட செயலாளர் டாக்டர் தமிழரசி சுப்பையா, அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவரும், அ.தி.மு.க. முன்னாள் மருத்துவர் அணி மாவட்ட தலைவருமான கே. எஸ். சுப்பையா பாண்டியன், டாக்டர் விஜய் கார்த்திக் ஆகியோர் வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை அனைத்து இந்திய சித்த மருத்துவ சங்கம் செய்திருந்தது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0