திருச்சி கிழக்குத் தொகுதியில் மீண்டும் இரட்டை இலை துளிர்கிறது : ராஜசேகரன் பிரச்சாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் உற்சாக வரவேற்பு

Apr 20, 2026 - 13:22
திருச்சி கிழக்குத் தொகுதியில் மீண்டும் இரட்டை இலை துளிர்கிறது : ராஜசேகரன் பிரச்சாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் உற்சாக வரவேற்பு

திருச்சி கிழக்குத் தொகுதியில் மீண்டும் இரட்டை இலை துளிர்கிறது : ராஜசேகரன் பிரச்சாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் உற்சாக வரவேற்பு

வருகிற சட்டமன்றத் தேர்தலில் தமிழக அளவில் திருச்சி கிழக்கு தொகுதி முக்கியத்துவம் தெரிகிறது. இதற்கு முக்கிய காரணம் தவெக தலைவர் விஜய் போட்டியிடுவதால் இத்தொகுதி முக்கியத்துவம் பெறுகிறது. இங்கு திமுக சார்பில் தற்போதைய எம் எல் ஏ இனிக்கோ இருதயராஜ், அதிமுக சார்பில் மாவட்ட பொருளாளர் ராஜசேகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இத்தொகுதியில் சிறுபான்மையினரின் வாக்குகள் அதிக அளவில் உள்ளதால் இங்கு நடிகர் விஜய் போட்டியிடுவதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய் இங்கு போட்டியிடுவது பற்றி திமுக அதிமுக வேட்பாளர்கள் கூறும், விஜய் அவர்கள் ஒரு பொறுட்டே இல்லை. ஒரு தொகுதியில் நிற்பதற்கு பயந்து கொண்டு இரண்டு தொகுதியில் போட்டியிடுவதாகவும் குற்றம் சாட்டினார்கள். இருந்தாலும் இந்த தொகுதியில் வெள்ளாளர் பிரிவு மக்கள் அதிக அளவில் இருப்பதால் ராஜசேகர் நம்பிக்கையுடன் இருக்கிறார். மேலும் நடிகர் விஜய் வெளியூர்க்காரர் என்றும் அவர் வெற்றி பெற்றால் தொகுதியில் தங்குவாரா என்றும் கேள்விகள் எழுகிறது. தற்போதைய எம்எல்ஏவான இனிகோ இதயராஜுக்கு தொகுதியில் ஒரு சில இடங்களில் தொகுதி பக்கமே வரவில்லை என்ற எதிர்ப்பு இருக்கின்றது. இந்த நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருச்சியில் எந்தவித வளர்ச்சியும் இல்லை என்றும் உள்ளூர் வேட்பாளரான எனக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் பிரச்சாரம் செய்வது பொதுமக்களிடம் கவனத்தை ஈர்க்கிறது. அதுமட்டுமின்றி அதிமுக மாவட்ட செயலாளர் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் ஆகியோரின் ஆலோசனைப்படி கூட்டணி கட்சியின் அனைத்து நிர்வாகிகளையும் அனுசரித்து பிரச்சாரம் மேற்கொள்வது இவருடைய தனி சிறப்பாக இருக்கிறது. மேலும் ஒவ்வொரு பகுதி பிரச்சாரத்திற்கு செல்லும் பொழுதும் அந்தப் பகுதியின் குறைகளை பற்றி பொதுமக்களிடம் பேசி மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் அந்த குறைகளை நிவர்த்தி செய்வேன் என்று கூறும் போது, பொதுமக்களிடம் இவருக்கு ஆதரவு அதிகரிக்கிறது.

மேலும் கிழக்குத் தொகுதி முழுவதும் வேட்பாளர் இல்லையென்றாலும் அந்தந்த வார்டு நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஆலோசனைப்படி தினமும் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்குகள் கேட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் தவெக வேட்பாளர் விஜய் வெளியூர்க்காரர் என்பதாலும், தற்போதைய எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் மீது ஒரு சில பகுதியில் அதிருப்தி இருப்பதாலும், திருச்சி கிழக்குத் தொகுதியை அதிமுக கைப்பற்றும் நிலையில் தற்போது உள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0