திருச்சி தில்லைநகர் பகுதியில் ப்ளூம்ஸ் ஃப்ரீ ஸ்கூல் திறப்பு விழா : மேயர் அன்பழகன் திறந்து வைத்தார்

May 24, 2026 - 11:36
May 24, 2026 - 17:04
திருச்சி தில்லைநகர் பகுதியில்  ப்ளூம்ஸ் ஃப்ரீ ஸ்கூல் திறப்பு விழா : மேயர் அன்பழகன் திறந்து வைத்தார்

திருச்சி தில்லைநகர் பகுதியில் ப்ளூம்ஸ் ஃப்ரீ ஸ்கூல் திறப்பு விழா : மேயர் அன்பழகன் திறந்து வைத்தார்

திருச்சி தில்லைநகர் 10 பி குறுக்குத் தெரு மேற்கு பகுதியில் சுதந்திர சிங் லாசரஸ் நினைவு அறக்கட்டளையின் சார்பில் ப்ளூம்ஸ் ப்ரீ ஸ்கூல் புதிதாக அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு பள்ளியின் தாளாளர் இன்ஜினியர் எஸ். பிரதீவ் தலைமை தாங்கினார். திருச்சி மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் ரிப்பன் வெட்டி புதிய பள்ளிக்கூடத்தை திறந்து வைத்தார்.

 பின்னர் அவர் பேசும்போது, சிறுவர் கல்வி குழந்தைகளின் தன்னம்பிக்கை, ஒழுக்கம், தொடர்பு திறன், படைப்பாற்றல் மற்றும் சமூகப் பழக்கவழக்கங்களை வளர்க்கும் முக்கிய அடித்தளம் என்றார். விழாவில் மெப்ஸ் இணை ஆணையர் சி. ஆர்தர், இந்திய உணவுக் கழக செயல் இயக்குனர் ஜெசிந்தா லாசரஸ், வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் ஸ்ரீதரன், டாக்டர்கள் கிங்ஸ்லி ஜெபக்குமார், ட செந்தூரன், ஆடிட்டர் பால்ராஜ் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த முக்கிய பிரமுகர்கள் பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர். இந்த பள்ளிக்கூடம் குழந்தைகள் பாதுகாப்பான மற்றும் நட்பு சூழலில் செயல்முறை கற்றல் மற்றும் விளையாட்டு வழியாக வளர வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ளது இங்கு பிளே குரூப், நர்சரி, எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. கிரீடோ ஹரிக்குலம் ஆதரவுடன் குழந்தைகளுக்கு கட்டமைக்கப்பட்ட செயல்வழி மற்றும் வயதிற்கு ஏற்ற கற்றல் வழங்கப்பட உள்ளது குளிர்சாதன வசதியுடன் கூடிய வகுப்பறைகள் சிசிடிவி கண்காணிப்பு, உள்ளக மற்றும் வெளிப்புற விளையாட்டு பகுதிகள் பெற்றோர் தொடர்பு வசதி, தனி உணவு அருந்தும் இடம் மற்றும் சுகாதாரமான சூழல் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் தனிப்பட்ட கவனம் கிடைக்கும் வகையில் குறைந்த ஆசிரியர் மாணவர் விகிதத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கிறார்கள் திறப்பு விழாவையொட்டி மதியம் 12:30 மணி முதல் மாலை 5 மணி வரை இலவச டேக் கேர் வசதி அறிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0