திருச்சி மெத்தடிஸ்ட் பள்ளியில் RYLA 2026 நிகழ்ச்சி
திருச்சி மெத்தடிஸ்ட் பள்ளியில் RYLA 2026 நிகழ்ச்சி
திருச்சிராப்பள்ளி மெத்தடிஸ்ட் பள்ளியில் ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி தமிழச்சி சார்பில் RYLA 2026 நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி தமிழச்சியின் தலைவர் Rtn. ஷமிலா ராகுல் தலைமை வகித்தார். தலைமை விருந்தினராக கலந்து கொண்ட எஸ். தமிழ்செல்வன், தொழில் திட்டமிடல், நினைவாற்றல் மேம்பாடு, மனவலிமை, ஒருமைப்பாடு மற்றும் வெற்றிக்கான மனப்பான்மை குறித்து மாணவர்களுக்கு சிறப்புரையாற்றினார். மேலும், ரோட்டரியன் டாக்டர் ஜெயலட்சுமி, தலைமைத்துவம், ஒழுக்கம், நற்பண்புகள் மற்றும் குணநலன் வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றி, தகுதியான மாணவர்களுக்கு NEET மற்றும் JEE தேர்வுகளுக்கான இலவச பயிற்சிக்கு நிதியுதவி வழங்க முன்வருவதாக தெரிவித்தார். இந்நிகழ்ச்சியை ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி தமிழச்சியின் செயலாளர் Rtn. சிந்தூரி நாதன் தொகுத்து வழங்கி நன்றி உரையாற்றினார். நிகழ்ச்சியில் பல ரோட்டரியன்கள் கலந்து கொண்டதுடன், 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்தனர். நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய மெத்தடிஸ்ட் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கு ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சி தமிழச்சி சார்பில் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0