திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி விரிவாக்கப் புலச் சாலைப் பாதுகாப்புக் குழுவின் இந்தக் கல்வியாண்டிற்கான தொடக்க விழா

Sep 13, 2026 - 21:06
Sep 13, 2026 - 21:08
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி விரிவாக்கப் புலச் சாலைப் பாதுகாப்புக் குழுவின் இந்தக் கல்வியாண்டிற்கான தொடக்க விழா

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி விரிவாக்கப் புலச் சாலைப் பாதுகாப்புக் குழுவின் இந்தக் கல்வியாண்டிற்கான தொடக்க விழா

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி விரிவாக்கப் புலச் சாலைப் பாதுகாப்புக் குழுவின் இந்தக் கல்வியாண்டிற்கான தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு விரிவாக்கப் புல இணை முதன்மையர் முனைவர் சாம் தேவ ஆசிர் தலைமை தாங்கினார். அவர் பேசும்பொழுது சாலைப் பாதுகாப்புக் குழு கடந்த கல்வி ஆண்டுகளில் செயலாற்றிய பல்வேறு சமூக நலப்பணிகளை நினைவு கூர்ந்தார். இந்தக் கல்வியாண்டில் குழுவின் செயல்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளையும் திட்டங்களையும் வழங்கினார். நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட திருச்சிராப்பள்ளி கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலம் அவர்கள் விபத்து இல்லாத சாலைப் பயணத்தின் முக்கியத்துவம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

இருசக்கர வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் அணிவதன் அவசியம், நான்கு சக்கர வாகனம் ஓட்டும் பொழுது சீட் பெல்ட் அணிவதன் அவசியம், சீரான வேகத்தால் வாகனங்களை இயக்குவதால் ஏற்படும் நன்மைகள் போன்றவற்றை எடுத்துரைத்தார். சாலை விபத்துகளில் இளம் தலைமுறையினர் அதிகம் பாதிக்கப்படுவது குறித்து கவலை தெரிவித்த அவர், ஒவ்வொரு விபத்தையும் தடுக்கின்ற களப் பணியாளர்களாகக் கல்லூரி மாணவர்கள் முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். சாலை விபத்துக்களால் இழப்பது உடல் உறுப்புகளோ, உயிர்களோ மட்டுமின்றி குடும்பத்திற்கான அடிப்படை ஆதாரம் என்பதை அவர் கூறியது மாணவர்களிடயே மிகுந்த கவனத்தையும் வரவேற்பையும் பெற்றது. அதனைத் தொடர்ந்து இந்தக் கல்வி ஆண்டிற்கான சாலைப் பாதுகாப்புக் குழுவின் மாணவச் சார்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முன்னதாக இந்நிகழ்விற்கான வரவேற்புரையை சாலைப் பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் பெ. ஆனந்த் ஆற்றினார். நிகழ்ச்சியின் நிறைவாகக் குழுவின் மற்றொரு ஒருங்கிணைப்பாளர் முனைவர் நெல்சன் ராஜ் நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குழுவின் மாணவச் சார்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0