திருச்சியில் ‘MINUS’ உடல் எடை குறைப்பு மையம் : நடிகர் ரியோ ராஜ் திறந்து வைத்தார்

Sep 18, 2026 - 13:06
Sep 18, 2026 - 13:06
திருச்சியில் ‘MINUS’  உடல் எடை குறைப்பு மையம் : நடிகர் ரியோ ராஜ் திறந்து வைத்தார்

திருச்சியில் ‘MINUS’ உடல் எடை குறைப்பு மையம் : நடிகர் ரியோ ராஜ் திறந்து வைத்தார்

திருச்சியில் உடல் எடை குறைப்பு மற்றும் உடல் வடிவமைப்பை மையமாகக் கொண்டு செயல்படும் ‘MINUS – Slim Down & Shape Up’ நிறுவனத்தின் புதிய கிளை பிரம்மாண்டமாக திறக்கப்பட்டது. திருச்சி கன்டோன்மென்ட், அலெக்சாண்ட்ரியா சாலையில் உள்ள ராஜேஸ்வரி டவர்ஸில் நடைபெற்ற திறப்பு விழாவில், நடிகர் ரியோ ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய கிளையை திறந்து வைத்தார்.

விழாவில் நிறுவனத்தின் CEO மற்றும் மேலாண்மை இயக்குநர் சரண் வேல், திருச்சி கிளை நிறுவனர்கள் செந்தில்குமார், தனுஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். உடல் எடை மேலாண்மை மற்றும் உடல் வடிவமைப்பு தொடர்பான சேவைகளை வழங்கும் MINUS நிறுவனம், திருச்சியை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு நகரங்கள் மற்றும் பிற மாநிலங்களிலும் கிளைகளைக் கொண்டுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். திருச்சியில் தொடங்கப்பட்டுள்ள புதிய கிளை மூலம், எடை மேலாண்மை தொடர்பான சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கும் வகையில் செயல்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0