பெண்களுக்கான பாலினச் சமத்துவம் மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

Oct 19, 2026 - 19:18
பெண்களுக்கான பாலினச் சமத்துவம் மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெண்களுக்கான பாலினச் சமத்துவம் மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் முதுகலை சமூகப்பணித் துறை முதலாம் ஆண்டு மாணவர்கள் சார்பில், திருச்சிராப்பள்ளி வயலூர் சமுதாயக் கூடத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பெண்களுக்காகப் பாலின உணர்வூட்டல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், திருச்சிராப்பள்ளி ஒருங்கிணைந்த சேவை மையத்தின் வழக்குப் பணியாளர் திருமதி ஜெனிபர் வளவாளராகக் கலந்து கொண்டு, பாலினச் சமத்துவம், சம உரிமைகள், சம வாய்ப்புகள், பெண்களின் உரிமைகள் மற்றும் பாலினப் பாகுபாட்டைத் தடுப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.

மேலும், குழந்தைத் திருமணத்தைத் தடுப்பது, பெண்களின் பாதுகாப்பு, விதவைகளின் நலன் ஆகிய முக்கிய அம்சங்கள் குறித்தும் விளக்கினார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் ஆதரவு சேவைகள் குறித்த தகவல்களையும் பங்கேற்பாளர்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள் ஆர்வத்துடன் கருத்துகளைக் கேட்டறிந்ததுடன், தங்களது சந்தேகங்களைக் கேட்டு விளக்கங்களையும் பெற்றனர். இந்நிகழ்ச்சியை பிஷப் ஹீபர் கல்லூரியின் முதலாம் ஆண்டு முதுகலை சமூகப்பணித் துறை மாணவர்களான சாம் எபினீசர் ஜே., முரளிவர்மா டி., சிவனேஷ் ஏ. மற்றும் நேகா ஸ்ரீ எம்.ஜே. ஆகியோர் ஒருங்கிணைத்தனர். நிகழ்ச்சிக்கான வழிகாட்டுதலை பிஷப் ஹீபர் கல்லூரி சமூகப்பணித் துறையின் உதவிப் பேராசிரியர் திருமதி வி. பியூலா நேசப்ரியா வழங்கினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0