தீபாவளியை முன்னிட்டு அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் திருச்சி மாவட்ட யூனியன் சரகம் 2 சார்பில் 340 பேருக்கு வஸ்திர தானம்
தீபாவளியை முன்னிட்டு அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் திருச்சி மாவட்ட யூனியன் சரகம் 2 சார்பில் 340 பேருக்கு வஸ்திர தானம்
அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், திருச்சி மாவட்ட யூனியன், சரகம் 2 சார்பாக, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வஸ்திர தானம் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு சரகத் தலைவர் முத்து என்கிற ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட புரவலர் NV முரளி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக ஸ்ரீரங்கம் KK மாமுண்டி கோனார் தோப்பு உரிமையாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் திருச்சி மாவட்ட மருத்துவ அணித் தலைவர் மருத்துவர் மனோகர் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் 340 நபர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகளான புடவை, வேஷ்டி மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
முன்னதாக, மாவட்ட இணைச் செயலாளர் சிதம்பரம் வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து திருச்சி மாவட்டத் தலைவர் ரமேஷ், செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் சுரேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்வில் அலுவலகச் செயலாளர் அம்சராம், மாவட்டத் துணைத் தலைவர் ராஜகோபால், பாண்டியன், இணைச் செயலாளர்கள் இளங்கோவன், தர்மலிங்கம், ராதாகிருஷ்ணன், தொண்டர் படை கண்காணிப்பாளர் புஷ்பராஜ், தொண்டர் படை துணைக் கண்காணிப்பாளர் சசிகுமார், ஆலோசகர்கள் ரகுநாதன், ராஜலிங்கம், வட்ட ஆய்வாளர் சரவணன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், கிளைச் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
நிறைவாக, தொண்டர் படை துணைக் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் நன்றியுரை வழங்கினார். தீபாவளி திருநாளில் 340 பேருக்கு புத்தாடைகளும் இனிப்புகளும் வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட இந்நிகழ்வு அனைவரின் பாராட்டையும் பெற்றது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0