திருச்சி மாநகராட்சி துணை மேயர் வார்டில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதை கண்டித்து அதிமுக கவுன்சிலர் அரவிந்தன் பொதுமக்களுடன் சாலை மறியல்

Oct 26, 2026 - 15:38
Oct 26, 2026 - 15:39
திருச்சி மாநகராட்சி துணை மேயர் வார்டில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதை கண்டித்து அதிமுக கவுன்சிலர் அரவிந்தன் பொதுமக்களுடன் சாலை மறியல்

திருச்சி மாநகராட்சி துணை மேயர் வார்டில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதை கண்டித்து அதிமுக கவுன்சிலர் அரவிந்தன் பொதுமக்களுடன் சாலை மறியல்

திருச்சி மாநகராட்சி துணை மேயர் வார்டில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதை கண்டித்து அதிமுக கவுன்சிலர் அரவிந்தன் பொதுமக்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாநகர் மாவட்டம், திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி, திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 33-வது வார்டில் உள்ள செங்குளம் காலனியில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாகவும். இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீரை குடிக்க பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருவதாகவும் குறை கூறினார்கள்.

 அப்பகுதி மக்கள் இதுகுறித்து மாநகராட்சியிடம் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததாலும், கடந்த சில நாட்களாக குப்பைகளையும் எடுக்கவில்லை என்று கூறி மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அதிமுக புரட்சித் தலைவி அம்மா பேரவை துணை செயலாளரும், மாநகராட்சி கவுன்சிலருமான சி.அரவிந்தன் தலைமையில் பாலக்கரை வேர்ஹவுஸ் இரட்டைப் பிள்ளையார் கோவில் அருகில் அதிமுக நிர்வாகிகள், அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்த அரியமங்கலம் கோட்ட உதவி ஆணையர், உதவி செயற்பொறியாளர் இப்ராஹிம் மற்றும் இளநிலை பொறியாளர் ரவிக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீரில் கழிவு நீர் கலப்பது மற்றும் அகற்றப்படாத குப்பைகளை இரண்டு நாட்களில் சரி செய்து தருவதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி அளித்ததின் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

 அதிமுக நிர்வாகிகளுடன், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிலமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0