திருச்சி இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் அம்மையார் திருமதி க. இந்திரா அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு அஞ்சலி

Oct 29, 2026 - 11:15
Oct 31, 2026 - 12:22
திருச்சி இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் அம்மையார் திருமதி க. இந்திரா அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு அஞ்சலி

திருச்சி இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் அம்மையார் திருமதி க. இந்திரா அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு அஞ்சலி 

திருச்சி இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் அம்மையார் திருமதி க. இந்திரா அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நிறுவனங்களின் செயலர் எர். ஜி. ராஜசேகரன், இயக்குநர் டாக்டர் ஜி. பாலகிருஷ்ணன், பதிவாளர் டாக்டர் எம். அனுசுயா, அனைத்துக் கல்வி நிறுவனங்களின் தலைவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு அம்மையாரின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி தங்களது மரியாதையைத் தெரிவித்தனர்.

கல்வி, ஒழுக்கம், மனிதநேயம் மற்றும் சமூக முன்னேற்றம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு வித்திட்ட அம்மையாரின் தொலைநோக்குப் பார்வையும் அர்ப்பணிப்பும் இந்நிகழ்வில் நினைவுகூரப்பட்டன. அவர் உருவாக்கிய கல்விச் சேவையின் பாதையில் தொடர்ந்து பயணிப்பதே அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும் என அனைவரும் நினைவுகூர்ந்தனர். மூன்றாண்டுகள் கடந்தாலும், அம்மையாரின் நினைவுகளும், அவர் விதைத்த கல்விச் சேவையின் கனவுகளும் என்றும் மறையாது. அவரது வழிகாட்டுதலும் தொண்டுள்ளமும் இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிப் பயணத்தில் என்றென்றும் நிலைத்திருக்கும். அம்மையாரின் நினைவுகள் என்றும் எங்கள் இதயங்களில் வாழும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0