சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் சார்பாக சரஸ்வதி பூஜை மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா

Oct 20, 2026 - 15:36
சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் சார்பாக சரஸ்வதி பூஜை மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு  பரிசளிப்பு விழா

திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் சார்பாக சரஸ்வதி பூஜை மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா

திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் சார்பாக, சங்க துணைச் செயலாளர் வெங்கடேசன் பூஜை செய்ய, சரஸ்வதி பூஜை சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, கடந்த காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப் போட்டியின் பரிசளிப்பு விழா, சங்கத் தலைவர் மகேஷ் தலைமையில், சங்கச் செயலாளர் அம்சராம் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சங்க கௌரவ ஆலோசகர்கள் வரதாச்சாரி, ரெங்கநாதன், பெருமாள், ராம்குமார் ஆகியோர் கலந்து கொண்டு, மாணாக்கர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தினர். மேலும், சங்க நிர்வாகிகள் துணைத் தலைவர் முரளிதரன், வினோத், ராம்பிரசாத், துணைச் செயலாளர் ராமன், பொருளாளர் ஹரிஹரன், இயக்குநர்கள் தினேஷ், மணிமாறன், சீனிவாசன் மற்றும் மாணாக்கர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். திருச்சிராப்பள்ளி சௌராஷ்ட்ரா வாலிபர் சங்கம் சார்பாக நடைபெற்ற இந்நிகழ்வு சிறப்பாகவும், மகிழ்ச்சிகரமாகவும் நடைபெற்றது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0