தீபாவளியை முன்னிட்டு என் எஸ் பி ரோட்டில் 15 நாட்களுக்கு கடை போட அனுமதிக்க வேண்டும் : அனைத்து தரைக்கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் கோரிக்கை

Oct 21, 2026 - 18:56
தீபாவளியை முன்னிட்டு என் எஸ் பி ரோட்டில் 15 நாட்களுக்கு கடை போட அனுமதிக்க வேண்டும் : அனைத்து தரைக்கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் கோரிக்கை

தீபாவளியை முன்னிட்டு என் எஸ் பி ரோட்டில் 15 நாட்களுக்கு கடை போட அனுமதிக்க வேண்டும் : அனைத்து தரைக்கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் கோரிக்கை

திருச்சி என்.எஸ்.பி. சாலையில் கடந்த பல வருடங்களாக 100க்கும் மேற்பட்டோர் சாலையோரம் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தனர். இந்நிலையில் போக்குவரத்தை காரணம் காட்டி அங்கிருந்த கடைகள் கடந்த ஜனவரி மாதம் அகற்றப்பட்டது. அவர்களுக்கு இது நாள் வரை மாற்று இடம் கொடுக்கவில்லை. இந்நிலையில் தீபாவளிக்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் அங்கு முன்பு கடை வைத்திருந்த வியாபாரிகளுக்கு 15 நாட்களுக்கு மட்டும் என் எஸ் பி ரோட்டில் கடை வைக்க அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்து தரைக்கடை தொழிற்சங்கங்கள் சார்பில் புதன்கிழமை மாநகராட்சி ஆணையரை சந்தித்து மனு கொடுக்க 100க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

அப்போது அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது: ​இந்த 15 நாட்களில் வியாபாரிகள் சம்பாதித்துத் தங்களது வாழ்க்கையைத் தற்காத்துக் கொள்வார்கள் என்பதால், அவர்கள் வயிற்றுப் பசியுடன் இந்தக் கோரிக்கையை முன்வைத்து வருகின்றோம். ​மாநகராட்சி அதிகாரிகள் தங்களுக்கு எவ்வித பதிலும் அளிக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டு வருகின்றனர். நாங்கள் காத்திருந்து மாநகராட்சி ஆணையரை பார்த்துப் பேசிய பிறகே முடிவு எடுக்க உள்ளோம். ​ஒருவேளை இந்தக் கோரிக்கை மறுக்கப்பட்டால், என்.எஸ்.பி. சாலையில் தினசரி போராட்டம் நடத்தி, கடை போடும் வரை அதைக் கைவிட மாட்டோம். தீபாவளி வரைக்கும் தற்காலிகமாகக் கடை போட அனுமதி வழங்க வேண்டும், தீபாவளிக்குப் பிறகு இடத்தைக் காலி செய்து கொள்வதாகவும் எழுத்துப்பூர்வமாக தரவும் தயாராகவும் உள்ளதாக அனைத்துக் கடைக்காரர்கள் சார்பாகத் தெரிவிக்கப்பட்டது. ​இருப்பினும், மாநகராட்சி ஆணையரோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ எதற்கும் பதில் அளிக்கவில்லை என்றும், இது தங்களை விரட்டும் நோக்கத்தில்தான் உள்ளதாகவும் குற்றம் சாட்டினார்கள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0