தேவர் சிலைக்கு அஜய் வாண்டையார் மாலை அணிவித்து மரியாதை

Oct 22, 2026 - 21:11
Oct 22, 2026 - 21:11
தேவர் சிலைக்கு அஜய் வாண்டையார் மாலை அணிவித்து மரியாதை

தேவர் சிலைக்கு அஜய் வாண்டையார் மாலை அணிவித்து மரியாதை

அஜய் வாண்டையார் அறக்கட்டளை சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அஜய் வாண்டையார் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அஜய் வாண்டையார்,

தமிழகம் முழுவதும் அஜய் வாண்டையார் அறக்கட்டளை என்ற பெயரில் தொண்டு நிறுவனம் துவங்கி உள்ளதாகவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இன்று திருச்சியில் நிர்வாகிகளுடன் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு தஞ்சை ராஜராஜ சோழன் தசய விழாவிற்கு செல்கிறோம், எங்கள் தொண்டு நிறுவனம் சார்பில் பொதுமக்களுக்கு கல்வி, விளையாட்டு , தண்ணீர் வசதி உள்ளிட்ட சமூக நலன் சார்ந்த உதவிகளை செய்து கொடுப்போம் என்றார். இது ஒரு தொண்டு நிறுவனம் எந்த காலத்திலும் அரசியல் கட்சியாக மாறாது என்றார். தமிழக வெற்றிக்கழக அரசு 4 மாதமாக நன்றாக செயல்படுகிறது தொடர்ந்து நன்றாக செயல்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்றார். முதலமைச்சர் விஜய் 30 ஆம் தேதி தேவர் குருபூஜையில் கலந்து கொள்வார் எனக் கூறப்படுகிறதே என கேட்டபோது அவர் வருகிறார் என்ற தகவல் இன்னும் உறுதியாக வில்லை. வந்தால் அவரை சந்திப்போம் என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0