தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தில்லை நகர் கார்த்திக் வைத்திய சாலாவில் அனைத்திந்திய தேவர் பேரவை தலைவர் டாக்டர் கே. எஸ். சுப்பையா பாண்டியன் தலைமையில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் : வாரியத் தலைவர் கு.ப. கிருஷ்ணன் வழங்கினார்

Oct 25, 2026 - 15:13

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அனைத்திந்திய தேவர் பேரவை சார்பில் திருச்சி தில்லை நகர் கார்த்திக் வைத்திய சாலாவில் (எச்.எச்.எச். மருத்துவமனை) நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. அனைத்திந்திய தேவர் பேரவை தலைவர் டாக்டர் கே. எஸ். சுப்பையா பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் மாநகராட்சி சுகாதாரக் குழு தலைவர் டாக்டர் தமிழரசி சுப்பையா வரவேற்றார். தமிழக வெற்றிக்கழக நிர்வாகி டாக்டர் விஜய் கார்த்திக் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் கு.ப. கிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 200க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு வேட்டி ,சேலை உணவு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் பூபதி, ஷாஜகான், சிவா, வினோத், ரஜினிகாந்த், திருநாவுக்கரசு, டாக்டர் ரபி, சுப்பிரமணியன், முத்துராமலிங்கம், மீனாட்சிசுந்தரம், மூர்த்தி, கதிரவன், காளிதாசன், பேச்சி முத்து உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0