மூளை நரம்பியல் நிபுணர்க்கு தமிழ் செம்மல் விருது : வாழ்த்து தெரிவித்த சமூக செயற்பாட்டாளர்கள்

Nov 12, 2026 - 08:45
மூளை நரம்பியல் நிபுணர்க்கு தமிழ் செம்மல் விருது : வாழ்த்து தெரிவித்த சமூக செயற்பாட்டாளர்கள்

மூளை நரம்பியல் நிபுணர்க்கு தமிழ் செம்மல் விருது : வாழ்த்து தெரிவித்த சமூக செயற்பாட்டாளர்கள்

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்குச் சிறப்பாகப் பங்காற்றும் தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் தகுதியான ஒருவர் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ் செம்மல் வழங்கப்படுகிறது. அவ்வகையில் அறிவியல் தமிழ் மூலம் மூளை நரம்பியல் நிபுணர் எம்.ஏ.அலீம் பாமர மக்களும் மருத்துவத்தை அறிந்து கொள்ளும் விதமாக செயல்பட்டதற்காக தமிழ் செம்மல் விருது வழங்கப்பட்டது. தமிழ் செம்மல் விருதாளர் மூளை நரம்பியல் நிபுணர் எம்.ஏ.அலீம் அவர்களை சமூக செயற்பாட்டாளர்கள் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் ,வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் உள்ளிட்டோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நவம்பர் 1, 1956-ஆம் நாளை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 1-ஆம் தேதி தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில் 76 தமிழறிஞர்களுக்கு 'தமிழ்ச் செம்மல்' விருதுகளும், திருக்குறள் முற்றோதல் செய்த 179 மாணவர்களுக்குப் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஆனந்த், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் பள்ளி கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோரால் வழங்கப்பட்டன. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மூளை நரம்பியல் மருத்துவ நிபுணர் எம்.ஏ. அலீம் 2025-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் 'தமிழ் செம்மல் விருது' வழங்கப்பட்டது. நரம்பியல் நிபுணர் ஒருவர் தமிழ் செம்மல் விருதைப் பெறுவது இதுவே முதல் முறையாகும். மருத்துவர் எம்.ஏ. அலீம் திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரியின் நரம்பியல் துறைத் தலைவராகவும், பேராசிரியராகவும், துணை முதல்வராகவும் பணியாற்றியவர். தமிழில் மருத்துவக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி பொதுமக்கள் நரம்பியல் நோய்கள் மற்றும் பொதுவான மருத்துவக் குறைபாடுகள் குறித்து எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். இவரது அர்ப்பணிப்புமிக்க சேவையைப் பாராட்டி இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

 பொதுவாகத் தமிழ் அறிஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் வழங்கப்படும் 'தமிழ் செம்மல் விருது' முதன் முறையாக ஒரு நரம்பியல் மருத்துவ நிபுணரின் அறிவியல் தமிழ் பங்களிப்பிற்காக வழங்கப்பட்டிருப்பது ஒட்டுமொத்த மருத்துவ உலகிற்கும் பெருமை சேர்க்கும் நிகழ்வாக அமைந்துள்ளது. மருத்துவ அறிவியலைத் தாய்மொழியான தமிழில் கொண்டு சேர்த்தால் மட்டுமே அது பாமர மக்களையும் சென்றடையும் என்பதற்கு மருத்துவர் எம்.ஏ. அலீம் எடுத்துக்காட்டாவார். விருது பெற்ற மருத்துவர் தமிழ்நாட்டில் திருக்குறள் பல்கலைக்கழகம் அமைக்கவும் தமிழ்நாடு தினத்தை அரசு விடுமுறையாக அறிவிக்கவும் கோரிக்கையும் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0