அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் திருச்சி மாவட்ட யூனியன் சார்பில் 17-வது ஆண்டு சபரிமலை விழாக்கால சிறப்பு முகாம் மற்றும் தொடர் அன்னதானம் தொடக்கம்
அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் திருச்சி மாவட்ட யூனியன் சார்பில் 17-வது ஆண்டு சபரிமலை விழாக்கால சிறப்பு முகாம் மற்றும் தொடர் அன்னதானம் தொடக்கம்
அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் திருச்சி மாவட்ட யூனியன் சார்பில், 17-வது ஆண்டு சபரிமலை விழாக்கால சிறப்பு முகாம் மற்றும் தொடர் அன்னதானத் தொடக்க விழா, கார்த்திகை முதல் நாளான 17.11.2026 செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது. நிகழ்ச்சியின் தொடக்கமாக, திருச்சி மாவட்ட போஷகர் N.V. முரளி அன்னக்கொடியை ஏற்றி வைத்தார். அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் தமிழ் மாநில அமைப்புத் தலைவர் விஸ்வநாதன் முகாமைத் தொடங்கி வைத்தார்.
மாநிலச் செயலாளர் முனைவர் ஐயப்பன் அன்னதானக் கூடத்தைத் திறந்து வைத்தார். வீரவநல்லூர் ஸ்ரீ குலசேகர ராமானுஜர் பீடம் ஸ்ரீஸ்ரீ ராம அப்ரமேய ராமானுஜ ஜீயர் சுவாமிகள் அன்னதானத்தைத் தொடங்கி வைத்தார்கள்.
ஸ்ரீ M.P.கோபால கிருஷ்ணன் (உரிமையாளர், KKS மாமுண்டி கோனார் தோட்டம், திருச்சி) முகாம் அலுவலகத்தைத் திறந்து வைத்தார். K.R.T. வெங்கடேஷ் (உரிமையாளர், K.R.T. Honda Showroom, திருச்சி) மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்தார். 58 நாட்கள் தொடர் சேவை 17.11.2026 அன்று தொடங்கப்பட்ட இம்முகாம், 12.01.2027 வரை தொடர்ந்து 56 நாட்கள் நடைபெற உள்ளது.
இம்முகாமின் மூலம், ஸ்ரீரங்கம் அரங்கநாதரைத் தரிசிக்கவும், சபரிமலைக்குச் செல்லவும் வருகை தரும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் பக்தகோடிகளுக்கு தினமும் காலை மற்றும் மாலை இருவேளைகளிலும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பக்தர்களுக்கு அவசர முதலுதவி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கும் வகையில், சங்கத்தின் மருத்துவக் குழுவினர் மூலம் தினந்தோறும் மருத்துவச் சேவைகள் அளிக்கப்பட உள்ளன. சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களின் பயணத்திற்கு உதவும் வகையில், செல்லும் வழிகளில் அமைந்துள்ள முக்கியத் திருத்தலங்கள் மற்றும் ஐயப்பன் கோவில்கள் குறித்த விவரங்கள் அடங்கிய வழிகாட்டிக் கையேடும் பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது. ஸ்ரீரங்கத்திற்கு வருகை தரும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, 18.11.2026 முதல் 02.12.2026 வரை தொடர்ந்து 15 நாட்களுக்கு, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை எலக்ட்ரானிக் பேட் மூலம் அக்குபஞ்சர் பாத சிகிச்சை சேவை வழங்கப்பட உள்ளது.
இம்முகாம் சிறப்பாகவும் தொடர்ந்து தடையின்றியும் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் கௌரவ தலைவர் சபரிதாசன், தலைவர் ரமேஷ் தலைமையில், மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் சுரேஷ், அலுவலகச் செயலாளர் அம்சராம், துணைத்தலைவர்கள் ராஜகோபால், முத்து, இணைச் செயலாளர்கள் இளங்கோவன், சிதம்பரம், ரகுநாதன், கிருஷ்ணன், சசிகுமார், துரை, பாலகிருஷ்ணன், முரளிதரன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஐயப்ப பக்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0