டாக்டர் கே.எஸ். சுப்பையா பாண்டியன் தலைமையில் நடைபெற்ற அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க கூட்டத்தில் முதல்வர் விஜய்க்கு வாழ்த்து
டாக்டர் கே.எஸ். சுப்பையா பாண்டியன் தலைமையில் நடைபெற்ற அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க கூட்டத்தில் முதல்வர் விஜய்க்கு வாழ்த்து
அனைத்திந்திய சித்த மருத்துவர் சங்கம், அனைத்திந்திய மாற்று முறை மருத்துவ அகாடமி சார்பில் மருத்துவர்கள் கூட்டம், திருச்சியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் டாக்டர் கே.எஸ். சுப்பையா பாண்டியன் தலைமை தாங்கினார். டாக்டர்கள் மதுரை காமராஜ், திருச்சி இப்ராஹிம், சேலம் பழனி, சேலம் அசோக்குமார், செயல் தலைவர் முனியசாமி, சென்னை வெங்கடேஸ்வரன், மதுரை சுந்தர மகாலிங்கம், சேலம் பரமேஸ்வரர், மதுரை அழகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் டாக்டர்கள் திருச்சி சேதுராமன் பாத்திமா, கணேசன், மதிக்குமார், நாமக்கல் இளங்கோவன், திருச்சி ரமேஷ், நாகர்கோவில் வேல் குமார், திண்டுக்கல் பிரகாஷ், திருச்சி ரபி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதில், புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசுக்கும், தமிழக முதல்-அமைச்சர் விஜய்க்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ்க்கும், 2 லட்சம் சித்த மருத்துவர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரி வித்தனர். கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள 2 லட்சம் சித்தா ஆயுர்வேத மருத்துவர் பாதுகாக்கும் பொருட்டு சித்த மருத்துவ நல வாரியம் உடனடியாக தொடங்க வேண் டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0