திருச்சி மணிகண்டம் ஒன்றியம் யாகப்புடையான்பட்டியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு : ஊர் பொதுமக்கள் கல்லூரி மாணவ மாணவிகள் கலெக்டரிடம் மனு

Nov 16, 2026 - 16:29
Nov 16, 2026 - 16:31
திருச்சி மணிகண்டம் ஒன்றியம் யாகப்புடையான்பட்டியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க  எதிர்ப்பு : ஊர் பொதுமக்கள் கல்லூரி மாணவ மாணவிகள் கலெக்டரிடம் மனு

திருச்சி மணிகண்டம் ஒன்றியம் யாகப்புடையான்பட்டியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு : ஊர் பொதுமக்கள் கல்லூரி மாணவ மாணவிகள் கலெக்டரிடம் மனு

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், அளுந்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட யாகப்புடையான்பட்டியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அந்தப் பகுதியைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் கல்லூரி மாணவிகள் ஒன்று திரண்டு திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது; யாகப்புடையான்பட்டியில் புனித பேட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அரசு தொழிற்பயிற்சி நிலையம், அரசு உயர்நிலைப் பள்ளி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி ஆகிய கல்வி நிலையங்கள் அமைந்துள்ளன.

இங்கு தினமும் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்வி பயில வருகை தருகின்றனர். கோவில்களும் அமைந்துள்ளன. எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்தால் தேவையற்ற வீண் சண்டை சச்சரவுகள் ஏற்படக்கூடும். இதனால் மாணவ, மாணவிகளின் கல்வி பாதிக்கப்படும். ஆகவே எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0