திருச்சி பேர்ல் அறக்கட்டளையின் சார்பாக ஸ்ரீரங்கம் சவேரியார் புரத்தில் குடும்பங்களோடு கிறிஸ்மஸ் கொண்டாட்டம் : நிறுவுனர் வழக்கறிஞர் டாக்டர் ராமச்சந்திரன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

Dec 21, 2025 - 10:05

திருச்சி பேர்ல் அறக்கட்டளையின் சார்பாக ஸ்ரீரங்கம் சவேரியார்புரத்தில் கிறிஸ்மஸ் பெருவிழா கொண்டாடப்பட்டது.

PEARL TRUST நிறுவுனரும் வழக்கறிஞருமான டாக்டர் R. ராமச்சந்திரன் தலைமையில் அறக்கட்டளையின் சார்பாக 100க்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பங்களுக்கு அரிசி 5 kg பருப்பு, சக்கரை, உப்பு , போன்ற மளிகை பொருட்களும், வெங்காயம் , தக்காளி உருளைக்கிழங்கு, போன்ற காய்கறி வகைகளையும் தானமாக வழங்கினார்கள்,

அறக்கட்டளையின் தன்னார்வ உறுப்பினர்களும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில், சவேரியார் புரத்தின் பங்குத்தந்தை அருட்திரு. அருள் சேவியர் மற்றும் முன்னாள் பங்கு தந்தை & அதிபர் அருட்திரு அந்தோணி தாஸ் அவர்களால், கிறிஸ்மஸ் விழாவின் சிறப்பினையும் , பகிர்வின் மகிழ்வு சிறப்பு பற்றியும், அருட் தந்தையர்களால் கிறிஸ்மஸ் செய்தியும் வழங்கப்பட்டது.

மேலும் புனித சிலுவை மட அருட் சகோதரி ஜூலி அவர்கள் இந்நிகழ்வினை வாழ்த்தி சிறப்பாக வழி நடத்தினார்கள். மேலும் அங்குள்ள மாணவ மாணவியர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்களும் அறக்கட்டளையின் சார்பாக வழங்கப்பட்டு அங்குள்ள குடும்பங்களோடு கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு பகிர்வின் பெருவிழா-2K25 சிறப்பாக கொண்டாடினார்கள்.

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0