திருச்சி இந்திரா கணேசன் கல்வி நிறுவனத்தில் சூரிய மின்சக்தி நிறுவுதல் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி

Oct 31, 2026 - 08:45
Oct 31, 2026 - 12:23
திருச்சி இந்திரா கணேசன் கல்வி நிறுவனத்தில் சூரிய மின்சக்தி நிறுவுதல் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி

இந்திரா கணேசன் கல்வி நிறுவனத்தில் சூரிய மின்சக்தி நிறுவுதல் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி

திருச்சி இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்கள் சார்பில், இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் (MSME) ஆதரவுடன், சூரிய மின்சக்தி நிறுவுதல் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு குறித்த மூன்று நாள் பயிற்சித் திட்டம் தொடங்கியது. இப்பயிற்சியில் மொத்தம் 85 பேர் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர். தொடக்க விழாவில், இந்திரா கணேசன் அறக்கட்டளையின் இன்குபேஷன் மேலாளர் டாக்டர் மு. ஜோசப் சேலத்ராஜ் வரவேற்புரை வழங்கினார். இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் செயலாளர் பொறியாளர் ஜி. ராஜசேகரன் தலைமையுரை ஆற்றினார். MSME தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தின் (CFTI), இந்திய அரசின் துணை இயக்குநர் அ. கொளஞ்சிவேல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பயிற்சித் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் இயக்குநர் டாக்டர் ஜி. பாலகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார். மேலும், கல்வி நிறுவனங்களின் பதிவாளர் டாக்டர் மு. அனுசுயா மற்றும் திருச்சி மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் டி. சிவக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு, சூரிய மின்சக்தித் துறையின் வளர்ச்சி, அதன் தொழில்நுட்ப முக்கியத்துவம் மற்றும் சுயதொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து சிறப்புரையாற்றினர்.

 பயிற்றுநர் சரவணன் சூரிய மின்சக்தி அமைப்புகளின் அடிப்படைகள், அதன் பயன்பாடுகள் மற்றும் நிறுவுதல் தொடர்பான தொழில்நுட்ப அறிமுகத்தை வழங்கினார். மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இப்பயிற்சியில் சூரிய மின்சக்தி அமைப்புகளின் அடிப்படைகள், சூரிய மின்தகடுகள் நிறுவுதல், தொழில்நுட்பச் செயல்முறைகள் மற்றும் நேரடி செய்முறைப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

மேலும், சூரிய மின்சக்தித் துறையில் சுயதொழில் மற்றும் புதிய தொழில் நிறுவனங்களைத் தொடங்குவதற்கான வாய்ப்புகள், தொழில்முனைவோர் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியின் முக்கிய நோக்கம், பங்கேற்பாளர்களுக்கு நவீன சூரிய மின்சக்தித் தொழில்நுட்பம் குறித்த அறிவையும், நடைமுறைத் திறன்களையும் வழங்குவதுடன், அவர்களைத் திறமையான தொழில்முனைவோராக உருவாக்கி, பசுமை ஆற்றல் வளர்ச்சிக்கும் சுயதொழில் வாய்ப்புகளுக்கும் வழிவகுப்பதாகும். இந்நிகழ்ச்சியை இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் இன்குபேஷன் செல் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஆர். பாரத் குமார், இன்குபேஷன் மேலாளர் டாக்டர் மு. ஜோசப் சேலத்ராஜ் மற்றும் அசோசியேட் மேலாளர் த. பவித்ரா ஆகியோர் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0