விடுதிகளுக்கு தமிழக அரசு சலுகைகள் வழங்க வேண்டும் : அமைச்சர் கே.என்.நேருவிடம் திருச்சி மண்டல விடுதி உரிமையாளர்கள் அமைப்பு கோரிக்கை
விடுதிகளுக்கு தமிழக அரசு சலுகைகள் வழங்க வேண்டும் : அமைச்சர் கே.என்.நேருவிடம் திருச்சி மண்டல விடுதி உரிமையாளர்கள் அமைப்பு கோரிக்கை
விடுதிகளுக்கு தமிழக அரசு சலுகைகளை வழங்க வேண்டும் என விடுதி உரிமையாளர்கள் அமைப்பினர் அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். திருச்சி விடுதி உரிமையாளர்கள் அமைப்பு, கோயம்புத்தூர் விடுதி உரிமையாளர்கள் அசோசியேஷனுடன் இணைந்து சேவையை திருச்சியில் தொடங்கியுள்ளது. இதன் தொடக்கமாக விடுதி உரிமையாளர்கள் அமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், விடுதிகளுக்கான அரசாங்க உரிமம், ஜிஎஸ்டி, வணிகக் கட்டிட வரி, ஆட்சியர் உரிமம், வணிக மின்சார கட்டணம் உள்ளிட்ட பல முக்கிய கருத்துகள் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இதையடுத்து நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் தமிழ்நாடு குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேருவை நேரில் சந்தித்து, விடுதிகளுக்கான அரசாங்க உரிமம், ஜிஎஸ்டி, வணிகக் கட்டிட வரி, வணிக மின்சார கட்டணம் மற்றும் ஆட்சியர் உரிமம் ஆகியவற்றில் சலுகைகள் வழங்க வேண்டி, திருச்சி மண்டலம் விடுதி உரிமையாளர்கள் அமைப்பு நிர்வாகிகள் சார் பில் மனு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் காளி தாஸ், விஜயகுமார், வீரப்பெருமாள், ஜே.கே.பஷீர், ஜெயராஜ், அனுராதா, ஷபானா அஸ்மி மற்றும் மதியரசி ஆகியோர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
2
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0