திருச்சியில் மாநகர் அதிமுக சார்பில் பொங்கல் விழா : மாவட்ட செயலாளர் சீனிவாசன் தொடங்கி வைத்தார்
திருச்சியில் மாநகர் அதிமுக சார்பில் பொங்கல் விழா : மாவட்ட செயலாளர் சீனிவாசன் தொடங்கி வைத்தார்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் இபி ரோடு சத்தியமூர்த்தி நகர் மதுரை வீரன் சுவாமி கோவில் அருகில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது விழாவிற்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கி பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வட்ட செயலாளர் சிங்கமுத்து அனைவரையும் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் அன்பழகன், இளைஞர் அணி செயலாளர் ரஜினிகாந்த், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வெங்கட் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் மகளிர் அணி செயலாளர் தமிழரசி சுப்பையா, முன்னாள் மருத்துவ அணி தலைவர் சுப்பையா பாண்டியன், பகுதி செயலாளர் ரோஜர், நத்தர்ஷா மற்றும் நிர்வாகிகள் நாகு, சுரேஷ், சங்கிலி ஹரி கிருஷ்ணன், முருகவேல், ராஜசேகர், சுரேஷ், காமராஜ், ராஜேந்திரன், வித்யா, பழனியம்மாள், பத்மா, ராஜா, ஐடி பிரிவு கதிரவன், புத்தூர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0