பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை

Oct 30, 2026 - 17:47

லட்சிய ஜனநாயக கட்சியின் திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் தில்லை எம்.ஆர். சதாம், திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர் சசிகுமார், திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் கே.எஸ். கண்ணன் ஆகியோர் ஒன்றிணைந்து தேவர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 இந்நிகழ்ச்சியில் திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0