முத்தரையர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க தமிழர் தேசம் கட்சி மாநில மாநாட்டில் தீர்மானம்
முத்தரையர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க தமிழர் தேசம் கட்சி மாநில மாநாட்டில் தீர்மானம்
முத்தரையர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என திருச்சியில் நடந்த தமிழர் தேசம் கட்சி மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசியல் அதிகார மீட்பு மாநாடு தமிழர் தேசம் கட்சி மற்றும் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் முத்தரையர்களின் அரசியல் அதிகார மீட்பு மாநில மாநாடு திருச்சி-திண்டுக்கல் சாலையில் ஆலம்பட்டிபுதூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழர் தேசம் கட்சியின் நிறுவனரும், வீர முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவருமான கே.கே.செல்வகுமார் கலந்து கொண்டு பேருரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, தமிழகம் முழுவதும் பெரும்பாலான முத்தரையர் மக்கள் வசிக்கக்கூடிய கிராமங்களில் அடிப்படை வசதிகள்கூட இல்லை. இது குறித்து யாரும் பேசவில்லை. அப்படி பேசினால் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் பகைத்து கொள்ளக்கூடும் என்ற பயம். இங்கு எதிர்த்து கேள்வி கேட்கக்கூடிய இடத்தில் நாம் தான் இருக்கிறோம். எங்களால் மட்டும் தான் இந்த மக்களுக்கான அரசியலை கொடுக்க முடியும். முத்தரையர் மக்களுக்கு எது தேவை என்பது எங்களுக்கு தெரியும். பா.ஜனதா கட்சி மதிக்காததால் தான் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறினோம். எனக்கென்று எதுவும் தேவையில்லை. எங்கள் சமூக மக்களுக்காக என்ன செய்தார்கள். எங்கள் சமுதாயத்துக்காக யாரை வேண்டுமானாலும் எதிர்ப்பேன். நமக்கான அரசியல் அதிகாரத்தை மீட்போம். 2026-ம் ஆண்டுக்கு பிறகு சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், உள்ளாட்சி பிரதிநிதிகளாகவும் நமது தம்பிகள் ஆக போகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார். மாநாட்டில். முத்தரையர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வகுப்புவாரி தொகுப்பு சம இடப்பங்கீட்டுடன், முத்தரையர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும். முத்தரையர் இன மக்களின் உட்பிரிவுகளான வலையர் அம்பலகாரர் சாதியினருக்கு 18 மாவட்டங்களில் தவறுதலாகவும், போலியாகவும் வழங்கப்பட்டுள்ள எம்.பி.சி. சாதிச்சான்றிதழ்களை திரும்ப பெற்றுக் கொண்டு டி.என்.சி./டி.என்.டி. சாதிச்சான்றிதழ்கள் வழங்க வேண்டும். வலையர் புனரமைப்பு வாரியத்தை உடனடியாக அறிவித்து செயல்படுத்தி அதனை முத்தரையர்களின் மறுவாழ்வு திட்டமாக மேம்படுத்திட வேண்டும். திருச்சியை 2-வது தலைநகரமாக... காவிரி-குண்டாறு-வைகை இணைப்பு திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும். ஐகோர்ட்டில் தமிழ்மொழியை கூடுதல் வழக்காடு மொழியாக அமைக்க வேண்டும். தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் சுப்ரீம் கோர்ட்டு அமர்வு அமைக்க வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். திருச்சியில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபத்தில் நூலகம் அமைக்க வேண்டும். தமிழகத்தின் 2-வது தலைநகரமாக திருச்சியை அறிவிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பங்கேற்றவர்கள் மாநாட்டில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் குரு மணிகண்டன் முத்துராஜா சிறப்புரையாற்றினார்.
மாநில துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாநில தகவல் தொழில்நுட்ப பாசறை சிவனேஷ்வரன், புதுக்கோட்டை மாநகர் மாவட்ட செயலாளர் காசி, மத்திய மண்டல மாநில செயலாளர் நத்தம் பூமி அம்பலம், வீரமுத்தரையர் முன்னேற்ற சங்க மாநில அமைப்பாளர் கள்ளிக்குடி ராஜேந்திரன், மாநில துணைத்தலைவர் கோ.சம்பத், இளைஞரணி அமைப்பாளர் குணசேகரன், தலைமை ஒருங்கிணைப்பாளர் வைரவேல், மாநில அமைப்பு செயலாளர் மகிடேசுவரன், மாநில பொதுச்செயலாளர் பூசாரி நடராஜன், மாநகர் மாவட்ட செயலாளர் வள்ளல்.மணி உள்பட நிர்வாகிகள் பலர் பேசினார்கள். மாநாட்டில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் தேர்தல் நிதிகளையும் வழங்கினார்கள். முன்னதாக மாவட்ட துணைச் செயலாளர் இளவரசன் வரவேற்றார். முடிவில் மாநகர் மாவட்ட துணை செயலாளர் அஜிஸ்கான் நன்றி கூறினார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0