திருச்சி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி செயலாளர் அறிவழகன் தலைமையில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் : எடப்பாடியை முதலமைச்சராக்க ஒற்றுமையுடன் களப்பணி ஆற்ற முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி வேண்டுகோள்

Jan 27, 2026 - 20:36
திருச்சி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி செயலாளர் அறிவழகன் தலைமையில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் : எடப்பாடியை முதலமைச்சராக்க ஒற்றுமையுடன் களப்பணி ஆற்ற முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி வேண்டுகோள்

திருச்சி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி செயலாளர் அறிவழகன் தலைமையில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் : எடப்பாடியை முதலமைச்சராக்க ஒற்றுமையுடன் களப்பணி ஆற்ற முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி வேண்டுகோள்

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி, திருப்பைஞ்சீலியில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட மாணவரணி செயலாளர் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் டி.அறிவழகன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் வி.ஆதாளி வரவேற்றார். திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி, மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் முன்னாள் என்.ஆர்.சிவபதி, தலைமைக் கழக பேச்சாளர் புதூர் மணி, கழக இளம்பேச்சாளர் டி.தீபா மணிகண்டன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

இதில் பரஞ்ஜோதி , என். ஆர்.சிவபதி ஆகியோர் பேசும் போது, தி.மு.க. மக்கள் விரோத ஆட்சியை அகற்ற பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலிமையான கூட்டணியை அமைத்துள்ளார். மக்கள் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு விடை கொடுத்து மக்கள் எடப்பாடியாரை முதலமைச்சராக முடிவு செய்துள்ளனர். ஆகவே கட்சியினர் ஒற்றுமையாக இருந்து களப்பணி ஆற்றிட வேண்டும் என்றார்.

 ஒன்றிய செயலாளர்கள் பொறியாளர் டி.ஜெயக்குமார், ஆமூர் எஸ்.ஜெயராமன், சி.வெங்கடேசன், என்.பிரகாசவேல், எல்.ஜெயக்குமார், பேரூராட்சி செயலாளர்கள் துரை.சக்திவேல், எஸ்.சம்பத்குமார், பேரவை மாவட்ட துணைத்தலைவர் வி.பி.முருகேசன், ஒன்றிய துணைச்செயலாளர் மீனாரவி, எம்.ஜி.ஆர் இளைஞரணி ஒன்றிய செயலாளர் பெ.தியாகராஜன், பேரவை ஒன்றிய செயலாளர் சி.ரகுபதி, இலக்கிய அணி மாவட்ட துணைத் தலைவர் உ.செல்வம், அண்ணா தொழிற் சங்க முன்னாள் மாநில இணைச்செயலாளர் மா. மாரியப்பன், வி.ஆர்.சுதாகர், டி.சுபாஷ், திருப்பைஞ்சீலி டி.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி.பி.பூனாட்சி, முன்னாள் எம்எல்ஏ டி.இந்திராகாந்தி, சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில துணைச் செயலாளர் ஆர்.எஸ்.புல்லட்ஜான், மாவட்ட கழக அவைத் தலைவர் சமயபுரம் டி.ராமு, மாவட்ட கழக துணைச் செயலாளர்கள் கல்லடிப்பட்டி எம்.கோவிந்தராஜ், வேம்பு ரெங்கராஜ், பேரவை மாவட்ட செயலாளர் அய்யம்பாளையம் ஜி.ரமேஷ், மீனவரணி பேரூர் என்.கண்ணதாசன், அமைப்புசாரா ஓட்டுநர் அணி எஸ்.சுந்தரமூர்த்தி, விவசாய அணி மில்க் கே.சரவணன், ஐடி பிரிவு பி.நாகராஜன், வழக்கறிஞர் பிரிவு ஏ.அன்புபிரபாகரன், வர்த்தக அணி கே.எஸ்.துரைராஜ், பொதுக்குழு உறுப்பினர் அ.திருநாவுக்கரசு முடிவில் ஒன்றிய அவைத்தலைவர் குருவம்பட்டி பி.பாலு நன்றி கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0