திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியில் 4வது மாநில அளவிலான சிலம்ப போட்டி-2026

Feb 2, 2026 - 17:13
திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியில் 4வது மாநில அளவிலான சிலம்ப போட்டி-2026

திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியில் 4வது மாநில அளவிலான சிலம்ப போட்டி-2026

திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியின் நிறுவன செயலாளர் ஆடிட்டர் கே.சந்தானம் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரி மற்றும் ஸ்ரீசெங்குளத்தான் குழுந்தலாயி அம்மன் குமரேசன் சிலம்பம் ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைந்து 4வது மாநில அளவிலான சிலம்ப போட்டி-2026 நடத்தினர்.

இதில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, திருநெல்வேலி மற்றும் பல மாவட்டங்களில் இருந்து இருந்து 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். காலை போட்டியை குழந்தைகள் நல டாக்டர் மாத்ருபூதம், தோல் டாக்டர் ஆர்.பாலகணபதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மாலை குழந்தைகளுக்கு பரிசு வழங்கும் விழாவில் சாரநாதன் பொறியியல் கல்லூரியின் செயலாளர் எஸ்.ரவீந்திரன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழை வழங்கினார். மேலும் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு ரொக்க பரிசு ரூ.24 ஆயிரம் வழங்கப்பட்டது.

முடிவில் சிலம்ப ஆசான் அ.குமரேசன் நன்றி கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0