திருச்சியில் மாநில அளவிலான யோகாசன போட்டி : அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி துவங்கி வைத்தார்

Feb 3, 2026 - 12:52
திருச்சியில் மாநில அளவிலான யோகாசன போட்டி : அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி துவங்கி வைத்தார்

திருச்சியில் மாநில அளவிலான யோகாசன போட்டி : அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி துவங்கி வைத்தார்

திருச்சியில் மாநில அளவிலான யோகாசன போட்டி நடைபெற்றது. போட்டியை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி துவங்கி வைத்தார். தமிழ்நாடு யோகாசன சங்கத்தின் பொதுசெயலாளர் யோகியார் இராமலிங்க அய்யா தலைமை தாங்கினார்.

டாக்டர் செந்தில்குமார் நல்லசாமி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார். போட்டிக்கான ஏற்பாடுகளை திருச்சிராப்பள்ளி யோகாசன சங்கத்தின் செயலாளர் யோகாச்சாரியா ராஜசேகர் ஏற்பாடு செய்து இருந்தார். ஆண் பெண் இருபாலர்களுக்கும் தனித்தனியாக போட்டிகள், வயது பிரிவின் அடிப்படையில் நடைபெற்றது. கடலூர், பெரம்பலூர் அரியலூர் ராமநாதபுரம் கொடைக்கானல் திண்டுக்கல், சென்னை, திருவள்ளூர், சிதம்பரம், திருநெல்வேலி, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0