ஆளுநர் விருது பெற்ற சமூக செயற்பாட்டாளரை பாராட்டிய மாற்றுத்திறனாளி சங்கத்தினர்

Feb 10, 2026 - 09:30
Feb 10, 2026 - 09:32
ஆளுநர் விருது பெற்ற சமூக செயற்பாட்டாளரை பாராட்டிய மாற்றுத்திறனாளி சங்கத்தினர்

ஆளுநர் விருது பெற்ற சமூக செயற்பாட்டாளரை பாராட்டிய மாற்றுத்திறனாளி சங்கத்தினர்

சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பான பணி செய்து வருபவ்ர்களுக்கு 2025-ம் ஆண்டுக்கான ஆளுநர் விருது மக்கள் மாளிகை சுதந்திரப் பொன்விழா அரங்கில் நடைபெற்றது.

 திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், சாதி, மத, இன பேதம் இன்றி உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்யும் பணியைப் பாராட்டி தனிநபர் பிரிவில் ஆளுநர் ஆர்.என்.ரவி விருதினை வழங்கினார். ஆளுநர் விருது பெற்ற சமூக செயற்பாட்டாளர் விஜயகுமாரை சாலை பயனீட்டாளர் நல அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் அய்யாரப்பன் முன்னிலையில், தன்னார்வ மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் சிவபிரகாசம் தின சேவை அறக்கட்டளை அறங்காவலர் பகவதி உள்ளிட்டோர் பொன்னாடை அணிவித்து பாராட்டினர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0