திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் புதுப்பொலிவுடன் அஸ்வின் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்நாக்ஸ் கடை திறப்பு
திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் புதுப்பொலிவுடன் அஸ்வின் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்நாக்ஸ் கடை திறப்பு
திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் புதுப்பொலிவுடன் அஸ்வின் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்நாக்ஸ் கடை திறப்பு திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் புதுப்பொலிவுடன் அஸ்வின் ஸ்வீட்ஸ் மற்றும் ஸ்நாக்ஸ் பிரமாண்ட கடை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
இந்த கடையை நிர்வாக பங்குதாரர்கள் செல்வகுமாரி, நிஷா, சிபி ஆகியோர் திறந்து வைத்தனர். சிறப்பு அழைப்பதாக சாந்தி ஸ்வீட்ஸ் உரிமையாளர் சூர்யா கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தார்.விழாவிற்கான ஏற்பாடுகளை அஸ்வின் ஸ்வீட்ஸ் பெரம்பலூர் மேனேஜர் அசோக் செய்திருந்தார்.
விழாவில் திருச்சி மேனேஜர் அன்பரசு மற்றும் வாடிக்கையாளர்கள்,ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் நிர்வாக பங்குதாரர் நிஷா கூறுகையில்: திருச்சியில் உள்ள சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகில், அஸ்வின் இனிப்புகள் மற்றும் ஸ்னாக்ஸ் கடை புதுப்பொலிவுடன் சிறப்பான முறையில் திறக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் மூன்று கிளைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், சத்திரம் பஸ் ஸ்டாண்ட், டோல்கேட் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மூன்று இடங்களிலும் பெரிய அளவிலான கடைகள் செயல்படத் தொடங்கியுள்ளன. தற்போது நம்மிடம் 45-க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. 15-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கு நமது தயாரிப்புகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. எங்களது அனைத்து தயாரிப்புகளுக்கும் கடலை எண்ணெய் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அது ஒருபோதும் மறுசுழற்சி செய்யப்படுவதில்லை.அனைத்து வகையான ஸ்வீட்ஸ்களும் சொந்தமாகத் தயாரிக்கப்படுகின்றன. எந்தவொரு கலப்படமும் இல்லாமல் தரமான முறையில் தயாரிக்கப்படுவதால், பொதுமக்களின் உடல் நலத்திற்கு உகந்ததாக இருக்கும். ஊறுகாய்களைப் பொறுத்தவரை எந்தவிதமான ரசாயனப் பொருட்கள் சேர்க்கப்படுவதில்லை. நல்லெண்ணெயைப் பயன்படுத்தி மட்டுமே அனைத்து ஊறுகாய்களும் தயாரிக்கப்படுகின்றன. சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் அமைந்துள்ள இந்த புதிய கிளை தமக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். இதற்கு முன்பு 10 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு 1,500 சதுர அடியில் சிறிய அளவில் கடை செயல்பட்டு வந்தது. தற்போது திருச்சியிலேயே மிகப்பெரிய அளவிலான ஸ்வீட்ஸ் மற்றும் ஸ்நாக்ஸ் விற்பனை நிலையமாக இது மாற்றப்பட்டுள்ளது. இங்கு ஸ்வீட்ஸ்களுக்கு எத்தகைய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதோ, அதே அளவுக்கு பேக்கரி வகைக்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஏராளமான பரிசுப் பொருட்கள் தொகுப்பு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஜெலாட்டோ மற்றும் சாட் வகைகளுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதோடு, வாடிக்கையாளர்கள் அமர்ந்து சுவைப்பதற்காக 60 பேருக்கு மேல் அமரும் வசதியுடன் கூடிய இருக்கை வசதியும் செய்யப்பட்டுள்ளது.சத்திரம் பஸ் ஸ்டாண்ட் என்பது திருச்சியின் மிக முக்கியப் பகுதியாகும். இங்கு வரும் வாடிக்கையாளர்கள் எங்கு ஷாப்பிங் சென்றாலும், பஸ் ஏறினாலும் எங்களுடைய கடையில் டீ, காபி மற்றும் ஸ்நாக்ஸ் வாங்கிச் செல்வது வழக்கம். வாடிக்கையாளர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு, வாகனங்கள் நிறுத்துவதற்கான முறையான பார்க்கிங் வசதியுடன் இந்தக் கடை திறக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான சிறப்புப் பரிசுகளும் கிஃப்ட் ஆப்ஷன்களும் இங்குக் கிடைக்கின்றன. பொதுமக்கள் அனைவரும் வருகை தந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கிறேன் என்றார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0