திருச்சி சிறுகனூரில் நாளை பிரமாண்ட திமுக மாநில மாநாடு : மு க ஸ்டாலின் எழுச்சி உரையாற்றுகிறார்

Mar 8, 2026 - 20:55
திருச்சி சிறுகனூரில் நாளை  பிரமாண்ட திமுக மாநில மாநாடு : மு க ஸ்டாலின் எழுச்சி உரையாற்றுகிறார்

திருச்சி சிறுகனூரில் நாளை பிரமாண்ட திமுக மாநில மாநாடு : மு க ஸ்டாலின் எழுச்சி உரையாற்றுகிறார்

2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தங்களை தயார் படுத்தி வருகின்றன. அந்த வகையில் தி.மு.க. திருச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்" பிரம்மாண்ட மாநாட்டை நடத்த முடிவு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மார்ச் 9ஆம் தேதி அதாவது நாளை இந்த மாநாடு நடைபெற உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் இந்த மாநாடு, தி.மு.க-வின் பலத்தை நிரூபிக்கும் ஒரு திருப்புமுனை மாநாடாக அமையும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்த மாநாட்டில் தலைமை தாங்கி திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு திமுக. கொடியேற்றி எழுச்சியுரை யாற்றுகிறார். கழக முதன்மை செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேரு வரவேற்றுப் பேசுகிறார்.

 தமிழ்நாடு துணை முதலமைச்சரும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். மாநாட்டில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர்கள் அமைச்சர் ஐ.பெரியசாமி அந்தியர் ப.செல்வராஜ், பொன்முடி, திருச்சி சிவா ஆ.ராசா, கனிமொழி கருணாநிதி, மு.பெ.சாமிநாதன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை அமைப்புச் செயலாளர் ப.தாயகம் கவி, இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, தலைமை நிலைய அலுவலக செயலாளர் துறைமுகம் காஜா, துணை அமைப்புச் செயலாளர் எஸ்.ஆஸ்டின், தலைமை நிலைய அலுவலக செயலாளர் எஸ்.முருகன் ஆகியோர் சிறப்புரை யாற்றுகிறார்கள். மாநாட்டில் அமைச்சர்கள், தலைமை கழக பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, க.வைரமணி, காடுவெட்டி ந.தியாகராஜன் எம்.எல்.ஏ. ஆகியோர் நன்றி கூறுகிறார்கள். திருச்சி மாவட்ட தி.மு.க. தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். இது திறந்தவெளி மாநாடாக நடைபெறுகிறது. இங்கு, தொண்டர்கள் அமர்வதற்கு 200 ஏக்கர் இடமும், வாகனங்கள் நிறுத்துமிடத்துக்கு 300 ஏக்கர் இடமும் தயார் செய்யப்பட்டுள்ளது. தற்போது தொண்டர்கள் அமரும் பகுதி முழுவதும் இளஞ்சிவப்பு நிறத்தில் தரை விரிப்புகள் விரிக்கப் பட்டுள்ளன. இந்த மாநாட்டில் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர் பார்க்கும் நிலையில், திடலில் மொத்தம் 5 லட்சம் நாற்காலிகள் போடப்பட உள்ளன. அமைச்சர் கே.என்.நேரு, கடந்த சில நாட்களாக மாநாடு நடக்கும் இடத்தில் முகாமிட்டு பணிகளை விரைவுபடுத்தி வருகிறார். மார்ச் 9-ம் தேதி காலை மாநாட்டு திடலில் அமைக்கப் பட்டுள்ள 100 அடி உயர கொடிக் கம்பத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சிக் கொடியை ஏற்றி வைக்கிறார். அதன்பிறகு மாநாட்டு நிகழ்வுகள் தொடங்குகின்றன. மாநாட்டில் திரைப்பட இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவின் இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது. அதன்பிறகு, மாலையில் மாநாட்டுத் திடலுக்கு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், மேடையின் முன்புறம் அமைக்கப்பட்டுள்ள அரை கி.மீ.நீள 'ரேம்ப்'பில் தொண்டர்கள் மத்தியில் நடந்து வருகிறார். திமுகவின் முன்னணி நிர்வாகிகள் பேசி முடித்தவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். இரவு 7 மணிக்குள் மாநாட்டை நிறைவு செய்யும் வகையில் நிகழ்ச்சி நிரல் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0