திருச்சி அரசு மருத்துவமனையில் செப்புக்குழாய் தொழிலாளி கைது

Mar 11, 2026 - 19:52
Mar 11, 2026 - 20:02
திருச்சி அரசு மருத்துவமனையில் செப்புக்குழாய் தொழிலாளி கைது

திருச்சி அரசு மருத்துவமனையில் செப்புக்குழாய் தொழிலாளி கைது

திருச்சி அரசு மருத்துவமனை புதிய லேபர் வார்டில் குளித்தலையை சேர்ந்த அண்ணாத்துரை ( 47) என்பவர் காவலாளியாக பணியில் இருந்தார்.

 அப்போது அந்த வார்டு அருகே இருந்த செப்பு குழாய்யை மர்ம நபர் ஒருவர் திருட முயன்ற உள்ளார். இதைப் பார்த்த அண்ணாத்துரை பொது மக்கள் உதவியுடன் அவரை கையும் களவுமாக பிடித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசில் ஒப்படைத்தார்.

தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் பாலக்கரை காஜாப்பேட்டை பகுதியை சேர்ந்த பாபுஜி (50) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் பாபுஜியை கைது செய்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0