உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு ப்ரண்ட்லைன் மருத்துவமனை சார்பில் நாளை வரை இலவச மருத்துவ ஆலோசனைகள் : நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் தகவல்

Mar 13, 2026 - 14:13
உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு ப்ரண்ட்லைன் மருத்துவமனை சார்பில் நாளை வரை இலவச மருத்துவ ஆலோசனைகள் : நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் தகவல்

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு ப்ரண்ட்லைன் மருத்துவமனை சார்பில் நாளை வரை இலவச மருத்துவ ஆலோசனைகள் : நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் தகவல்

உலக சிறுநீரக தினம் 12ந் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் உள்ள ப்ரண்ட்லைன் மருத்துவமனை சார்பில் 12 ஆம் தேதி நேற்று முதல் நாளை வரை 3 நாட்கள் இலவச மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

 காலை 10 மணிமுதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது. இந்த நிகழ்ச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெறுகிறது.

இந்த ஆலோசனையில் சிறுநீரக செயலிழப்பு, சிறு நீரக தொற்று நோய் கள், அனைத்து சிறுநீரக பிரச்சனைகள் (பாம்பு கடி, விஷ முறிவு, ஜன்னி) மற்றும் சிறுநீரகம் கழிக்கும் போது எரிச்சல், ரத்தம் கலந்து போவது, அவசரமாக சிறுநீர் கழித்தல், சிறுநீரக கல் தொந்தரவு, பிராஸ்டேட் சுரப்பி பிரச்சினைகள், சிறுநீரக புற்று நோய் போன்ற நோய்களுக்கு ஆலோசனைகளை சிறுநீரக சிறப்பு மருத்துவர், மற்றும் மாற்று சிறுநீரக மருத்துவ நிபுணர் டாக்டர் கணேஷ் அரவிந்த், சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கார்த்திகேயன் ஆகியோர் நோயினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நோயின் தன்மை சிகிச்சை குறித்தும், ஆலோசனைகளை, வழங்குகிறார்கள்.

மேலும் சிபிசி, யூரின் கிரியேட்டின், யூரின் ரொட்டின், யுஎஸ் ஜிஅ டோமன் ஆகிய பரிசோதனைகள் ரூ500க்கு செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் ஐசியு தீவிர சிகிச்சை பிரிவு, சாலை விபத்து பிரிவு, இருதய தீவிர சிகிச்சை பிரிவு, ரத்தக்குழாய் அறுவை சிகிச்சை, லேப்ராஸ்கோப் அறுவை சிகிச்சை கள், ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டிக் போன்ற சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது மேலும் தமிழக அரசின் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சைகள், அளிக்கப்படுகிறது. மருத்துவமனையில் அனைத்து தனியார் காப்பீடு வசதிகள் செய்து தரப்படும் என்று ப்ரண்ட்லைன் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0