திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் மலைக்கோட்டை பகுதியில் தீவிர பிரச்சாரம் : தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் மலைக்கோட்டை பகுதியில் தீவிர பிரச்சாரம் : தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
திருச்சி அதிமுக கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் இன்று மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோவில் மாணிக்க விநாயகர் சந்நிதியில் சுவாமி தரிசனம் செய்த பின் மலைக்கோட்டை, என் எஸ் பி ரோடு தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அதனைத் தொடர்ந்து இபி ரோடு அருகே தேர்தல் பணிமனை திறக்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கிழக்குத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களான மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் துணை மேயருமான சீனிவாசன், கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன், இளைஞர் அணி செயலாளர் ரஜினிகாந்த், பேரவை இணை செயலாளர் பொன்னார், சுரேந்தர், இளைஞர் பாசறை செயலாளர் லோகநாதன், பகுதி செயலாளர்கள் மலைக்கோட்டை அன்பழகன், சிந்தாமணி முத்துக்குமார், வெங்கட் பிரபு, ரோஜர் மற்றும் ஜவஹர், அப்பா குட்டி, திருச்சி நாகு, கிஷோர் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
1