திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட துவாக்குடி நகராட்சியில், திமுக வேட்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தீவிர வாக்கு சேகரிப்பு

Apr 5, 2026 - 08:17

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட துவாக்குடி நகராட்சியில், திமுக வேட்பாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 நகராட்சியின் 16-வது வார்டு முதல் 21-வது வார்டு வரை உள்ள பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று மக்களிடம் ஆதரவு திரட்டினார். அரசின் சாதனைகள், கடந்த 5 ஆண்டு கால திராவிட மாடல் அரசின் சாதனைகள் மற்றும் தமிழக முதல்வர் செயல்படுத்திய முன்னோடித் திட்டங்கள் குறித்துப் பொதுமக்களிடம் விரிவாக எடுத்துரைத்தார். துவாக்குடி பகுதி மேம்பாடு, நீண்ட காலமாகக் கோரிக்கையாக இருந்த, பட்டா இல்லாத ஏழை எளிய மக்களுக்கு உடனடிப் பட்டா வழங்கப்பட்டது. புதிய சாலை வசதிகள், சிறுவர்களுக்கான பூங்காக்கள், நவீன அங்கன்வாடி மையங்கள் மற்றும் ரேஷன் கடைகள் போன்ற எண்ணற்ற பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. வாக்கு சேகரிப்பின் போது பேசிய அவர், "உங்கள் வீட்டுப் பிள்ளையாகிய நான் மீண்டும் உங்களுக்காகப் பணியாற்றிட, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

 இதனைத் தொடர்ந்து, பெல் (BHEL) பாய்லர் ஆலை வளாகத்தில் நடைபெற்ற இரவு நேர வார சந்தைக்குச் சென்ற அவர், அங்கிருந்த இல்லத்தரசிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் நேரில் சென்று வாக்கு சேகரித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0