திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணி கட்சி தேர்தல் பணிமனை : அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்து வைத்தார்
திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணி கட்சி தேர்தல் பணிமனை : அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்து வைத்தார்
திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணி தேர்தல் அலுவலகத்தை அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்து வைத்தார். திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் (திமுக) தேர்தல் பணிமனை அலுவலகத் திறப்பு விழா இன்று தில்லை நகரில் நடைபெற்றது.
முதன்மைச் செயலாளரும், திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு புதிய தேர்தல் அலுவலகத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து, மறைந்த தலைவர்கள் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரது உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, தேர்தல் பணிகளை துரிதப்படுத்துவது குறித்து அறிவுறுத்தினார்.
இந்த விழாவில் அருண்நேரு எம்.பி., மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் மேயர் அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, திருவரங்கம் திமுக வேட்பாளர் துரைராஜ் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0