திருவெறும்பூர் தொகுதியில் கடந்த கால சாதனைகளை விளக்கி, மீண்டும் தனக்கு வாக்களிக்குமாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள்

Apr 10, 2026 - 11:24

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரும், அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது தொகுதியில் திருவெறும்பூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் நின்றபடி வீதி வீதியாகச் சென்று மக்களிடம் ஆதரவு திரட்டினார்.

 அவர் மொராய் சிட்டி, திருவளர்ச்சிபட்டி, குண்டூர் எம்.ஐ.டி (MIT) அய்யம்பட்டி பர்மா காலனி என ஒவ்வொரு பகுதியிலும் திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் தொண்டர்களிடையே குண்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு மக்களின் அடிப்படைத் தேவைகளை விளக்கி உரையாற்றினார். ஒரு சிறப்பான ஆட்சியை நீங்கள் தமிழகத்தில் அமர வைத்த பொழுது தமிழக முதல்வர் அவர்கள் இல்லம் தேடி கல்வி, நான் புதல்வன், விடியல் பேருந்து பயணம், மகளிர் உரிமைத்தொகை, என பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து மக்களுக்கு பயனுள்ளதாக இருந்து வந்ததாகவும் எனவே மக்களாகிய நீங்கள் அனைவரும் என்னை உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என எடுத்துரைத்தார்

 உரையாற்றிய அவர், கடந்த கால சாதனைகளை விளக்கி, மீண்டும் தனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். வழிநெடுகிலும் பொதுமக்களின் உற்சாக வரவேற்புடன் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0