திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் பாலக்கரை பகுதியில் தோசை சுட்டு பிரச்சாரம் : மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு

Apr 10, 2026 - 13:57

திருச்சி அதிமுக கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் பாலக்கரை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஒரு கடையில் தோசை சுட்டு பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் தலைமையில் நடந்து சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்த நிகழ்ச்சியில் கிழக்குத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களான அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன், இளைஞர் அணி செயலாளர் ரஜினிகாந்த், பேரவை இணை செயலாளர் பொன்னார், பகுதி செயலாளர்கள் மலைக்கோட்டை அன்பழகன், சிந்தாமணி முத்துக்குமார், ஏர்போர்ட் விஜி, வாசுதேவன், வெங்கட் பிரபு, சுரேந்தர், ரோஜர் மற்றும் ஜவஹர், அப்பா குட்டி, திருச்சி நாகு, கிஷோர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 வாக்கு கேட்டு வரும் வேட்பாளருக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0