திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளரும், அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கிறிஸ்தவ மக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி தீவிர பிரச்சாரம்

Apr 12, 2026 - 13:21

திருச்சி தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளரும், அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தனது தொகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். இன்று காலை ஆர்.கே. புரத்தில் அமைந்துள்ள குழந்தை இயேசு திருத்தலத்தில் நடைபெற்ற திருப்பலியிலும், அதனைத் தொடர்ந்து பிரகாஷ் நகர் ஏ.ஜி. சர்ச்சில் நடைபெற்ற சிறப்பு ஜெப வழிபாட்டிலும் அமைச்சர் கலந்துகொண்டார். வழிபாடுகள் முடிந்து ஆலயத்திலிருந்து வெளியே வந்த கிறிஸ்தவ மக்களிடம், துண்டுப் பிரசுரங்களை வழங்கி அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்குச் சேகரித்தார்.

இந்த வாக்குச் சேகரிப்பு நிகழ்வின் போது, மாநகரக் கழகச் செயலாளர் மு. மதிவாணன் மற்றும் நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளின் முக்கியப் பொறுப்பாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0