துவாக்குடி நகராட்சிப் பகுதிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி தீவிர வாக்கு சேகரிப்பு

Apr 19, 2026 - 09:42
துவாக்குடி நகராட்சிப் பகுதிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி தீவிர வாக்கு சேகரிப்பு

துவாக்குடி நகராட்சிப் பகுதிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி தீவிர வாக்கு சேகரிப்பு

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளரும், தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அமைச்சர், வலியடி கருப்பண்ண சுவாமி கோவில் தெரு துவாக்குடி வடக்கு மலை மற்றும் தெற்கு மலை செடி முருகன் கோவில் தெரு அண்ணா வளைவு பள்ளிவாசல் தெரு வ.உ.சி. நகர் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். அவர் பேசும்போது, இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்து துவாக்குடி நகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு புதிய திட்டங்கள், முடிவுற்ற கட்டுமானங்கள் மற்றும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.

அரசின் சாதனைகளைத் தொடரவும், தொகுதியின் வளர்ச்சியை முன்னெடுக்கவும் 'உதயசூரியன்' சின்னத்தில் வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0