திருநெல்வேலி செட்டிகுளம் அருகே தவெக தொண்டர் இசக்கியப்பன் தீக்குளிப்பு

May 9, 2026 - 13:22
May 9, 2026 - 13:27
திருநெல்வேலி செட்டிகுளம் அருகே தவெக தொண்டர் இசக்கியப்பன் தீக்குளிப்பு

திருநெல்வேலி செட்டிகுளம் அருகே தவெக தொண்டர் இசக்கியப்பன் தீக்குளிப்பு

திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளம் அருகேயுள்ள புதுமை கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கியப்பன் (47). இவர் தமிழக வெற்றி கழகத்தின் கிளைக் கழக செயலாளராகப் பணியாற்றி வருகிறார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு, தனது கட்சியின் தலைவர் விஜய் தமிழக முதல்வராக வேண்டி, சுமார் 16 அடி நீளம் கொண்ட வேலை அலகாகக் குத்திக் கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தித் தனது தீவிரப் பற்றை வெளிப்படுத்தியிருந்தார்.

​இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதல்வர் ஆக முடியாத சூழல் நிலவி வருவதாகக் கருதி மனமுடைந்த இசக்கியப்பன், இன்று திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். இதில் பலத்த காயமடைந்த அவர், தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0