திருச்சி கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3வதுஆண்டு பட்டமளிப்பு விழா

Aug 1, 2026 - 17:01
திருச்சி கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3வதுஆண்டு பட்டமளிப்பு விழா

திருச்சி கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3வதுஆண்டு பட்டமளிப்பு விழா

திருச்சி கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 3வது பட்டமளிப்பு விழா கேர் கல்விக்குழுமத்தின் தலைமை அதிகாரி பா. பிரதீவ் செந்த் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் சுகுமார்துரைசாமி இளங்கலை பட்டம் பெறப்போகும் மாணவர்களை வரவேற்று, பட்டமளிப்பு உறுதிமொழியை வாசித்தார். இதனைத் தொடர்ந்து, கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் டீன் (கல்வி தலைவர்) முனைவர் கு. அலெக்ஸ் பட்டம் பெறும் மாணவர்களுக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார். சிறப்பு விருந்தினராக டெர்பி ஜீன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் விஜய் கபூர் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினார். தனது உரையில், வாழ்க்கையில் தெளிவான திட்டத்துடன் செயல்பட வேண்டும், ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் குருமார்களுக்கு எப்போதும் மரியாதை செலுத்த வேண்டும் என்பதன் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும், நேர்த்தியான உடை அணிதல், சிறந்த ஆளுமையை வெளிப்படுத்தும் விதம் மற்றும் தனது வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு மாணவர்களை ஊக்குவித்தார். பாரதிதாசன் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் பி.எஸ்.சி. காட்சித் தொடர்பியல் துறையைச் சேர்ந்த இம்மானுவேல் ஆர்.டி. பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றதற்காகவும், நவீன் 11-ஆம் இடம் பெற்றதற்காகவும் கௌரவிக்கப்பட்டனர். மேலும், பி.எஸ்.சி. உட்புற வடிவமைப்புத் துறையைச் சேர்ந்த பி. அல்மாஸ் ஃபர்ஜீஸ் முதலிடம், ஏ. ஏஞ்சல் இரண்டாம் இடம், ஏ. சாரா கிளாடிஸ் மூன்றாம் இடம் பெற்று பல்கலைக்கழக தரவரிசையில் இடம் பெற்றதற்காக பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவினை வணிகவியல் மற்றும் கணினிப் பயன்பாட்டியியல் துறைத் தலைவர் முனைவர் பீ. அப்துல் சுபான் ஒருங்கிணைத்தார். இதில் பல்வேறு துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0