இஸ்லாமிய மாணவியர் அமைப்பு சார்பில் மாபெரும் இஸ்லாமிய கண்காட்சி

Aug 3, 2026 - 13:55
Aug 3, 2026 - 13:56
இஸ்லாமிய மாணவியர் அமைப்பு சார்பில் மாபெரும் இஸ்லாமிய கண்காட்சி

இஸ்லாமிய மாணவியர் அமைப்பு சார்பில் மாபெரும் இஸ்லாமிய கண்காட்சி

இஸ்லாமிய மாணவியர் அமைப்பு(GIO), திருச்சி கிளையின் சார்பாக பெண்மையை போற்றுவோம் (Embracing Femininity) என்ற மையக்கருத்தில் மாபெரும் இஸ்லாமிய கண்காட்சி ஸ்டீல் தோப்பு நூருல் ஹுதா பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது.

 இக்கண்காட்சியை வழக்கறிஞர் முஸ்ஃபிரா தொடங்கி வைத்தார்.

 பெண்களுக்கு எதிராக நடைபெறும் பிரச்சனைகள், பெண்கள் பாதுகாப்பு, மது-போதை இல்லா தமிழ்நாடு, குடும்ப உறவுகளின் சீர்கேடு, மன நலம் போன்ற தலைப்புகளில் 50 -க்கும் மேற்ப்பட்ட அரங்குகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.

மாணவிகளின் கலைத்திறன், அவர்கள் அதனை விளக்கிய விதம் மிகச் சிறப்பாக இருந்தது. 750-க்கும் மேற்பட்ட நபர்கள் இக்கண்காட்சியை பார்வையிட்டு பயன் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 3
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0