சிலம்பத்தை சுற்றியவாறே 118 தனிமங்களின் பெயர்கள், அணு எண்கள் மற்றும் வேதியியல் குறியீடுகளை வெறும் 2 நிமிடங்கள் 54 விநாடிகளில் ஒப்புவித்து சோழன் உலகச் சாதனை : 6 வயது மொஹமட் ஷாரிக் மாணவனுக்கு பாராட்டு
ஒற்றைச் சிலம்பத்தை சுற்றியவாறே 118 தனிமங்களின் பெயர்கள், அணு எண்கள் மற்றும் வேதியியல் குறியீடுகளை வெறும் 2 நிமிடங்கள் 54 விநாடிகளில் ஒப்புவித்து சோழன் உலகச் சாதனை : 6 வயது மொஹமட் ஷாரிக் மாணவனுக்கு பாராட்டு
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் வசித்து வரும் மொஹமட் அஜ்மல் மற்றும் திருமதி ருபியா பானு ஆகியோரின் 6 வயது மகன் மொஹமட் ஷாரிக். இயல்பாகவே மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் திறன் கொண்ட இவரது திறமையைக் கண்டறிந்த பெற்றோர், தொடர்ந்து பயிற்சி அளித்ததன் விளைவாக, ஒற்றைச் சிலம்பத் தடியை இடைவிடாமல் சுற்றியவாறே, 118 தனிமங்களைக் கொண்ட முழு தனிம அட்டவணையில் இடம்பெற்றுள்ள அனைத்து தனிமங்களின் பெயர்களையும், அவற்றின் அணு எண்கள் மற்றும் வேதியியல் குறியீடுகளுடன், வெறும் 2 நிமிடங்கள் 54 விநாடிகளில் துல்லியமாக ஒப்புவித்து சோழன் உலகச் சாதனை படைத்தார்.
இவரது இச்சாதனை முயற்சியை அங்கீகரித்த சோழன் உலகச் சாதனைப் புத்தக நிறுவனம், சட்டகம் செய்யப்பட்ட உலகச் சாதனைச் சான்றிதழ், பதக்கம், நினைவுக் கேடயம், அடையாள அட்டை மற்றும் கோப்பு (File) ஆகியவற்றை வழங்கி மாணவனைப் பாராட்டி கௌரவித்தது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0