திருச்சி இரட்டை வாய்க்கால் அமிர்த வித்யாலயம் உயர்நிலைப் பள்ளியில் 17 ஆம் ஆண்டு விளையாட்டு தின விழா

Aug 26, 2026 - 08:34
Aug 26, 2026 - 08:36
திருச்சி இரட்டை வாய்க்கால் அமிர்த வித்யாலயம் உயர்நிலைப் பள்ளியில் 17 ஆம் ஆண்டு விளையாட்டு தின விழா

திருச்சி இரட்டை வாய்க்கால் அமிர்த வித்யாலயம் உயர்நிலைப் பள்ளியில் 17 ஆம் ஆண்டு விளையாட்டு தின விழா

திருச்சி இரட்டை வாய்க்கால் அமிர்த வித்யாலயம் உயர்நிலைப் பள்ளியில் 17 வது ஆண்டு விளையாட்டு தின விழா கொண்டாடப்பட்டது..

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திருச்சி வன அலுவலர் சரவணன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார். 7 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை நடைபெற்ற விளையாட்டு போட்டியில் 1200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் பார்வையாளர்கள் கலந்து கொண்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகளையும் கண்டு களித்தனர். இறுதியில் வெற்றி பெற்ற 200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றுதலையும் வழங்கி ஒட்டுமொத்த புள்ளியின் அடிப்படையில் வெற்றி பெற்ற பச்சை அணியினருக்கு முதல் பரிசை வழங்கி கௌரவித்தனர். இதில் பெற்றோர்கள் மாணவர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் திருச்சி அண்ணா பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் டாக்டர். கோபிநாத் கலந்து கொண்டு பல்வேறு பிரிவுகளி

ல் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் பதக்கங்களும் வழங்கி விளையாட்டின் முக்கியத்துவம் உடல் நலத்தின் முக்கியத்துவம் தனிமனித ஒழுக்கம் போன்ற நல்ல விஷயங்களை மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 1
Sad Sad 0
Wow Wow 0